Published : 24 Aug 2019 04:04 PM
Last Updated : 24 Aug 2019 04:04 PM

கே.எல். ராகுல் கேப்டன்?- கிங்ஸ் லெவனில் அஸ்வினின் இடமும் கேள்விக்குறி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன்சியையும் அந்த அணியில் தான் விளையாடும் இடத்தையும் அஸ்வின் இழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அஸ்வினை வேறொரு அணிக்கு விற்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

கிங்ஸ் லெவன் உரிமையாளர்கள் சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

2018 சீசனில் அஸ்வின் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 7ம் இடத்திலும் 2019 தொடரில் 6ம் இடத்திலும் முடிந்தது. மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் நீக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியேற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த பேரிடியாக அஸ்வின் கிங்ஸ் லெவன் விஷயமும் முடிவுக்கு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக வெளியான மும்பை மிரர் செய்திகளின்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி அஸ்வின் மீது ஆர்வம் காட்டிவருவதாகத் தெரிகிறது. இதற்காக அஸ்வினை நேரடியாக ஒப்பந்திக்குமா அல்லது வீரர்கள் பரிமாற்றம் மூலம் அஸ்வின் மாற்றிக் கொள்ளப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

மும்பை மிரர் செய்திகளின் படி கிருஷ்ணப்பா கவுதமை கிங்ஸ் லெவனுக்குக் கொடுத்து விட்டு அஸ்வினை ராஜஸ்தான் ராயல்ஸ் பெறலாம் என்ற அனுமானங்களும் எழுந்துள்ளன.

2018-ல் அஸ்வின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினால் ரூ.7.6 கோடிக்கு வாங்கப்பட்டார். இந்நிலையில் டெல்லி அணியில் ஷ்ரேயஸ் அய்யர் தலைமையின் கீழ் அல்லது ராஜஸ்தான் ராயல்ஸ் என்றால் ஸ்டீவ் ஸ்மித்தின் தலைமையின் கீழ் அஸ்வின் ஆடலாம்.

அஸ்வினுக்குப் பதில் கிங்ஸ் லெவன் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x