மே.இ.தீவுகளுக்கு எதிராக 11 டெஸ்ட்களில் 60 விக்கெட்; 552 ரன்கள்: அஸ்வின் நீக்கம் குறித்து கவாஸ்கர் அதிர்ச்சி

மே.இ.தீவுகளுக்கு எதிராக 11 டெஸ்ட்களில் 60 விக்கெட்; 552 ரன்கள்: அஸ்வின் நீக்கம் குறித்து கவாஸ்கர் அதிர்ச்சி
Updated on
1 min read

மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தற்போதைய இந்திய ஸ்பின்னர்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ரவி அஸ்வின் உட்கார வைக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்தார்.

பயிற்சி ஆட்டத்தில் கொஞ்சம் உடல் நலக்குறைவினால் பவுலிங் வழங்கப்படவில்லை என்ற நிலையில் 2வது இன்னிங்சில் அவர் முழு உடல் தகுதியுடன் இருந்தார், ஆண்டிகுவா டெஸ்ட்டுக்கும் முழு உடல்தகுதியுடன் அவர் இருக்கிறார்.

இந்நிலையில் அவரை உட்கார வைத்து விட்டு ரவீந்திர ஜடேஜாவை எடுத்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அஸ்வினின் டெஸ்ட் கரியருக்கும் கோலி, ரவிசாஸ்திரி அண்ட் கோ ஆப்பு வைக்க முயல்கிறதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மே.இ.தீவுகளில் டாப் 6 வீரர்களில் 3 வீரர்கள் இடது கை பேட்ஸ்மென்கள் உள்ளனர், இவர்களுக்கு அஸ்வினின் ஆஃப் ஸ்பின் தான் பிரச்சனையாக இருந்திருக்கும் ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

மே.இ.தீவுகளுக்கு எதிராக 11 டெஸ்ட் போட்டிகளிலில் அஸ்வின் 4 சதங்கள் உட்பட 552 ரன்களை எடுத்ததோடு பவுலிங்கில் 11 டெஸ்ட் போட்டிகளில் 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 4 முறை ஒரு இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் சோனி தொலைக்காட்சியில் சுனில் கவாஸ்கர் கூறும்போது, “அணித்தேர்வு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, மே.இ.தீவுகளுக்கு எதிராக இத்தகைய ரெக்கார்ட் வைத்திருக்கும் ஒரு நபரை (அஸ்வின்) அணியில் தேர்வு செய்யாமல் விடுவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது” என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in