ரோஹித், அஸ்வின், சஹா, குல்தீப், உமேஷ் இல்லை: இந்தியா முதலில் பேட்டிங்

ரோஹித், அஸ்வின், சஹா, குல்தீப், உமேஷ் இல்லை: இந்தியா முதலில் பேட்டிங்
Updated on
1 min read

நார்த்சவுண்டில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி டாஸில் வென்று முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்துள்ளது.

பிட்ச் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்தாலும் ஒரு இரண்டகத் தன்மை இருக்கும் என்று பிட்ச் அறிக்கையில் டேரன் கங்கா தெரிவித்தார். இந்திய அணி ஜடேஜாவை ஒரே ஸ்பின்னராகச் சேர்த்துள்ளது, ஆகவே 4 பவுலர்கள், கூடுதலாக சில ஓவர்க்ளை வீச ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பில்லை, அதே போல் அஸ்வின் உட்கார வைக்கப்பட்டு ஜடேஜாவுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, ‘எங்கேயோ இடிக்கிறது’ என்று முணுமுணுக்க வைக்கும் ரக தேர்வாக உள்ளது.

ராகுல் அகர்வால் இறங்கி ஆடிவருகின்றனர்.

மே.இ.தீவுகள் அணி: க்ரெய்க் பிராத்வெய்ட், ஜான் கேம்பெல், ஷேய் ஹோப், டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மையர், ராஸ்டன் சேஸ், ஷமார் புரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், மிகுவெல் கமின்ஸ், கிமார் ரோச், ஷனன் கேப்ரியல்

இந்திய அணி: மயங்க் அகர்வால், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ஜடேஜா, இஷாந்த் சர்மா, பும்ரா, ஷமி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in