வலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித் ‘சேட்டைகளை’ மிமிக்ரி செய்து கலாய்த்த  ஜோப்ரா ஆர்ச்சர் 

வலைப்பயிற்சியில் ஸ்டீவ் ஸ்மித் ‘சேட்டைகளை’ மிமிக்ரி செய்து கலாய்த்த  ஜோப்ரா ஆர்ச்சர் 
Updated on
1 min read

ஸ்டீவ் ஸ்மித் பேட் செய்யும் போது அதிகமாக உடல்மொழியைப் பயன்படுத்தி கடும் சேட்டைகளைச் செய்வார். பந்துகளை ஆடும்போதும் சரி, ஆடாமல் விடும்போதும் சரி ஸ்மித் செய்யும் செயல்கள் தற்போது கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

இந்நிலையில் 3வது டெஸ்ட் ஹெடிங்லேயில் இன்று தொடங்கவுள்ள நிலையில் வலைப்பயிற்சியில் ஸ்மித் பேட்டிங் செய்வது போல் அப்படியே மிமிக்ரி செய்து அசத்தியது வலைத்தளங்களில் வைரலானது.

ஸ்மித்தை முதலில் முழங்கையில் தன் பவுன்சர் மூலம் தாக்கிக் காயப்படுத்திய ஜோப்ரா ஆர்ச்சர், பிறகு இன்னொரு பவுன்சரை வீச ஸ்மித் கழுத்தில் தாக்க பெவிலியன் திரும்பினார், மீண்டும் வந்து ஆடி 3 பவுண்டரிகள் அடித்து 92 ரன்களில் வெளியேறினார்.

இந்நிலையில் மறுநாள் காலை தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி என்று ஸ்மித் கஷ்டப்பட கன்கஷன் பதிலி வீரராக லபுஷேன் களமிறங்கினார். அவரும் ஆர்ச்சர் பந்தில் ஹெல்மெட் கம்பியில் ‘டங்’ என்று வாங்கி நிலைகுலைந்தார்.

ஏற்கெனவே ஸ்மித் கீழே விழுந்த நிலையில் அவரை கவனிக்காமல் சிரித்தபடியே ஆர்ச்சர் சென்றதும், 92 ரன்களில் ஸ்மித் ஆட்டமிழந்து செல்வதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் கடும் கோபாவேசத்தைக் கிளப்பியது.

இந்நிலையில் ஸ்மித்தை கேலி செய்யுமாறு நெட்டில் பேட் செய்ததும் பலரிடையே சிரிப்பை வரவழைத்தாலும் மேலும் பலர் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்மித், ஜோப்ரா ஆர்ச்சர் வீடியோ வருமாறு:

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in