

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் நாளை கார்டிஃபில் தொடங்குவதை அடுத்து இளவரசர் சார்லஸ், ஆஸ்திரேலிய வீரர்களை சந்தித்தார்.
ஸ்வாலெக் ஸ்டேடியத்திற்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய இளவரசர் சார்லஸ், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களிடம் சிறிது நேரம் பேசினார்.
குறிப்பாக மிட்செல் ஜான்சனைப் பற்றியே அவர் அதிகம் கேட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் சிட்னி மார்னிங் ஹெரால்ட் தெரிவித்துள்ளது.
அவருடன் உரையாடிய பிறகு ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நேதன் லயன் கூறும்போது, “அவர் எங்களைச் சந்தித்தது மகிழ்ச்சிகரமாக உள்ளது. மிட்செல் ஜான்சனைப் பற்றி அதிகம் விசாரித்தார். அவர் எவ்வளவு வேகம் வீசுவார் என்று கேட்டார்” என்று தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டிக்கான முதல் 4 நாட்களுக்கான டிக்கெட் விற்றுத் தீர்த்துள்ளது.