

புதுடெல்லி
விளையாட்டுத் துறையில் தலை சிறந்த சாதனையாளர்களை கவுர விக்கும் விதமாக ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான விளையாட்டு விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு அறிவித் துள்ளது.
இதன்படி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் மாற்றுத் திறனாளி தடகள வீராங்கனை தீபா மாலிக் ஆகியோர் ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
எஸ்.பாஸ்கரன் (பாடி பீல்டிங்), ரவீந்திர ஜடேஜா (ஆடவர் கிரிக் கெட்), பூனம் யாதவ் (மகளிர் கிரிக் கெட்), தஜிந்தர் பால் சிங் (தடகளம்), மொகமது அனாஸ் (தடகளம்), சோனியா லேதர் (குத்துச்சண்டை), சிங்லென்சனா சிங் கங்குஜம் (ஹாக்கி), அஜய் தாக்குர் (கபடி), கவுரவ் சிங் கில் (கார் பந்தயம்), பிரமோத் பகத் (பாரா பாட்மிண்டன்), அஞ்சும் மவுத்கில் (துப்பாக்கி சுடுதல்), ஹர்மீத் ரஜூல் தேசாய் (டேபிள் டென்னிஸ்), பூஜா தண்டா (மல் யுத்தம்), பவாத் மிர்ஸா (குதிரை யேற்றம்), குர்பிரீத் சிங் சாந்து (கால்பந்து), ஸ்வப்னா பர்மான் (தடகளம்), சுந்தர் சிங் குர்ஜார் (பாரா தடகளம்), சாய் பிரணீத் (பாட்மிண்டன்), சிம்ரன் சிங் ஷெர்கில் (போலோ) ஆகியோர் அர்ஜூனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பாட்மிண்டன் பயிற்சியாளர் விமல் குமார், டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் சந்தீப் குப்தா, தடகள பயிற்சியாளர் மொகீந்தர் சிங் தில்லான் ஆகிய 3 பேர் துரோணாச்சாரியா விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
ஹாக்கி பயிற்சியாளர் மெர்ஸ்பன் பட்டேல், கபடி பயிற்சியாளர் ராம்பீர்சிங் கோக்கர், கிரிக்கெட் பயிற்சியாளர் சஞ்சய் பரத்வாஜ் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மனுவேல் ஃபிரட்ரிக்ஸ் (ஹாக்கி), அரூப் பஸாக் (டேபிள் டென்னிஸ்), மனோஜ்குமார் (மல்யுத்தம்), நித்தன் கீர்த்தனே (டென்னிஸ்), லால்ரெம்சங்கா (வில்வித்தை) ஆகிய 5 பேர் தியான்சந்த் விருதுக்கு தேர்வாகி உள்ளனர்.
29-ம் தேதி விழா
இந்த விருதுகள் வரும் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது பெறுபவர்களுக்கு பதக்கம், பாராட்டு பத்திரம் ஆகியவற்றுடன் ரூ.7.5 லட்சம் பரிசுத் தொகை யும் வழங்கப்படும்.
அதேவேளையில் அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது பெறுபவர்கள் சிலை, சான்றிதழ் ஆகியவற்றுடன் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பெறுவார்கள்.