Published : 19 Aug 2019 10:18 AM
Last Updated : 19 Aug 2019 10:18 AM

மே.இ.தீவுகள் சென்ற இந்திய அணி வீரர்களுக்கு மிரட்டல்: கண்காணிப்பு தீவிரம்; பலத்த பாதுகாப்புக்கு உத்தரவு

கோப்புப்படம்

புதுடெல்லி,

மேற்கிந்தியத் தீவுகள் சென்ற இந்திய அணிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு பிசிசிஐக்கு வந்ததையடுத்து, இந்திய அணி வீரர்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது. டி20,ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்ட நிலையில், வரும் 22-ம் தேதி முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கான தீவிரப் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மே.இ.தீவுகள் ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்திய அணி வீரர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்பு பிசிசிஐக்கு கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து, இந்தியத் தூதர் மூலம், மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும் இந்திய அணி வீரர்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்த அதிகாரி கூறுகையில், "இந்திய வீரர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சில தொலைபேசி அழைப்புகள் வந்தன. அதை சாதாரணமாக எடுக்க விரும்பவில்லை. அதனால், மேற்கிந்தியத் தீவுகளில் இருக்கும இந்திய அணிக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்த கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

இந்திய அணிக்கு கூடுதலாக ஒரு பைலட் படை பாதுகாப்பு, கூடுதல் கண்காணிப்புடன் கூடிய பாதுகாவலர்களை ஏற்பாடு செய்யும்படி இந்தியத் தூதரிடம் கேட்டுக்கொண்டோம்.
அதை ஏற்று இந்தியத் தூதரும் ஆன்டிகுவா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்திய அணிக்கு முன்னெச்சரிக்கையாக கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது" எனத் தெரிவித்தார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x