Published : 18 Aug 2019 06:41 PM
Last Updated : 18 Aug 2019 06:41 PM

காஷ்மீரில் பாரசூட் ரெஜிமண்டில் 20நாட்கள் பயிற்சியை முடித்தார் தோனி 

புதுடெல்லி,
காஷ்மீரில் 2 வாரங்கள் ராணுவத்தின் பாரசூட் ரெஜிமண்டில் பயிற்சியை முடித்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் தோனி, இன்று டெல்லி வந்து சேர்ந்தார்.

இப்போது டெல்லியில் தோனி அவரின் மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவுடன் உள்ளார் என்று ராணுவம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி இந்திய ராணுவ பாராசூட் ரெஜிமென்டில் தோனி, லெப்டினென்ட் அந்தஸ்தில் 2011-ம் ஆண்டில் இருந்து பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது பயிற்சி பெற்று வருகிறார். தோனி ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவது வளரும் இளைஞர்களை ராணுவப் பணியில் ஆர்வத்துடன் சேர்வதற்கு வழிவகுக்கும் என்பதால், அதற்கான விழிப்புணர்வாக அவர் அதைச் செய்து வருகிறார்.


மே.இ.தீவுகள் தொடரில் இருந்து தாமாக முன்வந்து விலகிய தோனி, 2 வாரங்கள் பாராசூட் ரெஜிமென்டில் சேர்ந்து பயிற்சி பெறப் போவதாகத் தெரிவித்தார். தோனி 106 பாரா டிஏ பாராசூட் ரெஜிமென்டில் முறைப்படி கடந்த ஜூலை மாதம் 25-ம் தேதி சேர்ந்த தோனிக்கு காஷ்மீரில் இம்மாதம் 15-ம் தேதிவரை பயிற்சி அளிக்கப்பட்டது.


காஷ்மீரில் உள்ள ராணுவத்தின் விக்டர் படைப்பிரிவில் அணிவகுப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தோனிக்கு கடந்த 2 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின் சுதந்திரத்தினம் அன்று லடாக் சென்ற தோனி, அங்கு சுதந்திரதினத்தைக் கொண்டாடினார். மேலும், லடாக்கில் உள்ள சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி தோனி மகிழ்ந்தார். அந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகின. மேலும் சியாச்சின் பகுதிக்குச் சென்ற தோனிக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சியாச்சினில் உள்ள ராணுவ பள்ளியில் மாணவர்களுடன் தோனி உரையாடி மகிழ்ந்தார். ஏறக்குறைய 20 நாட்கள் பயிற்சியை முடித்த தோனி இன்று டெல்லி வந்து சேர்ந்தார்.


ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x