Published : 18 Aug 2019 03:35 PM
Last Updated : 18 Aug 2019 03:35 PM

ஸ்மித் சதமெடுக்காமல் ஆட்டமிழந்து சென்றது மகிழ்ச்சியாக இருந்தது: ஜோப்ரா ஆர்ச்சர்

ஆஸ்திரேலிய வீரரும் இங்கிலாந்தின் பெரிய கவலையுமாகத் திகழ்ந்து வரும் ஸ்டீவ் ஸ்மித் நேற்று ஜோப்ரா ஆர்ச்சர் பவுன்சரில் கழுத்தில் அடிவாங்கி நிலைகுலைந்தார்.

அப்போது மற்ற வீரர்கள் அனைவரும் ஸ்மித் அருகே கவலையுடன் கூடியிருக்க ஜோப்ரா ஆர்ச்சர் ஸ்மித் அருகில் போவதைத் தவிர்த்ததோடு சிரித்துக் கொண்டே வேறொரு பக்கம் சென்றார், இது நெட்டிசன்களிடையே கொஞ்சம் பிரச்சினையைக் கிளப்பியது, ஆர்ச்சர் எப்படி கவலையில்லாமல் அப்படிப் போக முடியும் என்ற தொனி நேற்றிலிருந்தே கருத்துகளாக வெளிவந்து கொண்டிருந்தன.

இந்நிலையில் தான் அப்போது என்ன உணர்ந்தேன் என்பதை ஆர்ச்சர் ஸ்கை ஸ்போர்ட்ஸுக்காகத் தெரிவித்தார்:

அந்த நேரத்தில் நான் என்ன நினைத்தேன் என்று உள்ளபடியே என்னால் கூற முடியவில்லை. யாராவது அடிபட்டு கீழே விழுவது பார்க்கக் கூடாத ஒரு நிகழ்வாகும், அதுவும் ஸ்ட்ரெச்சரில் ஒருவர் மைதானத்தை விட்டு வெளியேறுவதையும் நான் பார்க்க விரும்ப மாட்டேன். அல்லது அவர்கள் அன்றைய தின கிரிக்கெட்டை ஆடாமல் போவதோ, அல்லது போட்டியிலேயே ஆட முடியாமல் போவதோ, சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தது (பிலிப் ஹியூஸ் மரணம்) எனக்கு விருப்பமில்லாத விஷயங்கள்.

அது பார்க்க அவ்வளவு நன்றாக இருக்காது. நான் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த நினைத்தே அந்தப் பந்தை வீசினேன் ஏனெனில் ஒரு ஷார்ட் லெக், ஒரு லெக்ஸ்லிப் வைத்து வீசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் பவுன்ஸ் செய்தால் பந்து இந்த 2 பீல்டர்களில் ஒருவருக்குத்தான் செல்லும்.

பந்துகள் பீல்டர் கைகளுக்குச் செல்வதில்லை, ஒன்று முன்னால் விழுகிறது இல்லையேல் பின்னால் செல்கிறது.

ஆனால் நேற்று ஸ்மித் சதமெடுக்காமல் வெளியேறியதைப் பார்க்க மகிழ்ச்சியாகவே இருந்தது.

இவ்வாறு கூறினார் ஜோப்ரா ஆர்ச்சர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x