Published : 18 Aug 2019 10:40 AM
Last Updated : 18 Aug 2019 10:40 AM

கேல் ரத்னா விருதுக்கு தீபா மாலிக் பெயர் பரிந்துரை

புதுடெல்லி

2016-ல் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வீராங்கனை தீபா மாலிக் பெயர் ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கேல் ரத்னா, அர்ஜுனா விருது களுக்கு விளையாட்டு வீரர்கள் பெயரைத் தேர்வு செய்ய 12 பேர் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவின் 2 நாள் கூட்டம் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

முதல் நாள் கூட்டத்தின்போது கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பெயர் பரிந் துரை செய்யப்பட்டது. நேற்று நடை பெற்ற 2-ம் நாள் கூட்டத்தின்போது கேல் ரத்னா விருதுக்கு குண்டு எறிதல் வீராங்கனை தீபா மாலிக் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.

மேலும் அர்ஜுனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, வீராங்கனை பூனம் யாதவ், தடகள வீரர்கள் தேஜிந்தர் பால் சிங் தூர், முகமது அனாஸ், ஸ்வப்னா பர்மன், கால்பந்து வீரர் குர்பிரீத் சிங் சாந்து, ஹாக்கி வீரர் சிங்லென்சனா சிங் கங்குஜம், துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அஞ்சும் மவுத்கில் உள்ளிட்ட 19 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

மேலும் துரோணாச்சார்யா விருதுக்கு முன்னாள் பாட்மிண்டன் வீரர் விமல் குமார், வாழ்நாள் துரோணாச்சர்யா விருதுக்கு 3 பேரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x