Published : 17 Aug 2019 09:47 AM
Last Updated : 17 Aug 2019 09:47 AM

இன்று முதல் சென்னையில் புரோ கபடி லீக் போட்டித் தொடர்: முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு மோதல்

சென்னை

இன்று முதல் சென்னையில் புரோ கபடி லீக் போட்டித் தொடர் நடை பெறவுள்ளது. முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.

12 அணிகள் பங்கேற்கும் புரோ கபடி லீக் போட்டி கடந்த மாதம் ஹைதராபாதில் தொடங்கியது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு முக்கிய நகரங்களில் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

துடிப்பான கபடி வீரர்களுக்கு மிகப்பெரிய பாலமாக விளங்கி வரு கிறது புரோ கபடி லீக் போட்டி. இது 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்டு வெற்றிகரமான போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.

ஹைதராபாதில் தொடங்கிய இப்போட்டி மும்பை, பாட்னா, அகமதாபாத், சென்னை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், பஞ்ச்குலா, நொய்டா ஆகிய இடங்களில் நடைபெறு கிறது. தற்போது அகமதாபாதில் நடைபெற்று வரும் இப்போட்டி இன்று முதல் ஒரு வாரத்துக்கு சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பி யன் பெங்களூரு புல்ஸ், 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன் களான ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், மும்பை மற்றும் தமிழ் தலைவாஸ், குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன், தெலுங்கு டைட் டன்ஸ், ஹரியாணா ஸ்டீலர்ஸ், உ.பி.யோதா, பெங்கால் வாரி யர்ஸ், தபாங் டெல்லி ஆகிய 12 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த தடவை போட்டி அட்டவணை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு முன் னேறும். மற்ற 2 அணிகள் எது? என்பது வெளியேற்றுதல் (எலிமி னேட்டர்) சுற்று மூலம் முடிவு செய்யப்படவுள்ளது.

அக்டோபர் 14-ம் தேதி நடை பெறும் முதலாவது வெளியேற்று தல் சுற்று ஆட்டத்தில் புள்ளி பட்டி யலில் 3-வது இடம் பிடிக்கும் அணி யும், 6-வது இடம் பெறும் அணியும் மோதும். அதேநாளில் நடைபெறும் 2-வது வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 4-வது, 5-வது இடம் பிடிக்கும் அணிகள் சந்திக்கும். இந்த மோதலில் வெற்றி பெறும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். அக்டோபர் 16-ம் தேதி அரைஇறுதிப்போட்டியும், அக்டோ பர் 19-ம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது.

இந்த சீசனுக்காக ஒவ்வொரு அணிகளும் புதிய வீரர்களை ஏலம் மூலம் வாங்கி இருக்கின்றன. தமிழ் தலைவாஸ் அணிக்கு அஜய் தாக் குர் கேப்டன் பொறுப்பேற்றுள்ளார் அணியில் நட்சத்திர வீரர்கள் ராகுல் சவுத்ரி, சபீர் பாபு, மொகித் சில்லார், ரன்சிங் ஆகியோரும் உள்ளனர். இந்த போட்டி தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.1.80 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.1.20 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. அடுத்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ், டெல்லி தபாங் அணிகள் சந்திக்கவுள் ளன.

‘உள்ளூர் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு’

சென்னையில் நடைபெறவுள்ள புரோ கபடி லீக் தொடரின்போது உள்ளூர் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் இ.பாஸ்கரன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “இந்தத் தொடரின்போது தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 3 போட்டிகளில் வெற்றி பெற்றோம். 2 போட்டிகளில் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோல்வி கண்டோம். ஒரு போட்டி டையில் முடிவடைந்தது.

சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளின்போது உள்ளூர் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் அளிக்கப்படும். நட்சத்திர வீரர்கள் அஜய் தாக்குர், ராகுல் சவுத்ரி உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். யாருக்கு இந்தத் தொடரில் கோப்பை வெல்ல வாய்ப்புக் கிடைக்கும் என்று கூற முடியாது. அனைத்து அணிகளும் சமபலத்துடன் விளங்குகின்றன. தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் அனைவரும் நல்ல உடற்தகுதியுடன் போட்டிக்குத் தயாராகியுள்ளனர். ஒவ்வொரு போட்டியின்போது அந்த சூழ்நிலைக்குத் தகுந்தவாறு வீரர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுக்கப்படுகின்றன. புரோ லீக் கபடி தொடர் மூலம் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன. இதனால் அவர்களுக்கு தேசிய அணியில் விளையாட வாய்ப்புக் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x