Published : 16 Aug 2019 04:23 PM
Last Updated : 16 Aug 2019 04:23 PM

பாகிஸ்தானில் நம்மை வெறுப்பேற்றுவது சுதந்திரமின்மை, பாதுகாப்பு பிரச்சினைகள்: கிராண்ட் பிளவர்

பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக 5 ஆண்டுகள் பணியாற்றிய கிராண்ட் பிளவர் பாகிஸ்தானில் வாழ்வது என்பதில் உள்ள குறைபாடுகளைச் சுட்டும்போது சுதந்திரமின்மை, பாதுகாப்பு சிக்கல்களைக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளராக 2014ம் ஆண்டு ஜிம்பாப்வேயின் கிராண்ட் பிளவர் நியமிக்கப்பட்டார். ஆனால் தற்போது அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததால் அவர் வேறு பணிகளுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் “பாகிஸ்தானில் வாழ்வதில் சிக்கலான இரண்டு விஷயங்கள் ஒன்று சுதந்திரமின்மை இன்னொன்று பாதுகாப்பு பிரச்சினைகள்” என்றார்.

மேலும் 2017 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்களானது தன் பயிற்சிகால பெருமை என்று கூறினார். மேலும் தனது பெருமைக்குரிய சொந்த சாதனை என்றும் கூறுகிறார் கிராண்ட் பிளவர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பணியாற்றுவதில் உள்ள தொல்லைகள் குறித்து கூறும்போது, “முன்னாள் வீரர்கள் பலர் முதுகில் குத்துவார்கள். டிவி சேனல்களில் ஏகப்பட்ட அரசியல், பத்திரிகையாளர்கள் மற்றும் பாகிஸ்தான் வாரியத்தில் உள்ளவர்கள் என்று ஏகப்பட்ட அரசியல், நிச்சயம் அங்கிருந்து வந்ததில் இதில் எனக்கு பெரிய நிம்மதிதான்.

என் பயிற்சியில், நான் பயிற்சியளித்ததில் சிறந்த வீரர் பாபர் ஆஸம், ஹாரிஸ் சோஹைல் திறமைக்கும் கீழே ஆடுகிறார், அவரது சிறந்த ஆட்டத்தை இன்னமும் அவர் வெளிப்படுத்தவில்லை.” என்றார் கிராண்ட் பிளவர்.

மேலும் பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட் அமைப்பை வலுப்படுத்த வேண்டியுள்ளது என்று தெரிவித்தார் கிராண்ட் பிளவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x