

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியூஸிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரண்டன் மெக்குல்லம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில், ''மெக்குல்லம் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று அதிகாரபூர்வமாகப் பதிவிட்டுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து மெக்குல்லம் கூறும்போது, “ இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை சிறந்த கவுரவமாக கருதுகிறேன்’’ என்று தெரிவித்தார்.
கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக இருந்த தென் ஆப்பிரிக்காவின் காலிஸ் சமீபத்தில் தனது பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் மெக்குல்லம் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மெக்குல்லம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 2008-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையும், 2012-ம் ஆண்டுமுதல் 2013-ம் ஆண்டு வரையும் விளையாடியுள்ளார். அவர் 2012-ம் ஆண்டு கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த போது அந்த அணி ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது.
மெக்குல்லம் சமீபத்தில்தான் சர்வதேசப் போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.