Published : 14 Aug 2019 08:17 AM
Last Updated : 14 Aug 2019 08:17 AM

கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - மே.இ.தீவுகள் இன்று மோதல்: ரன்கள் சேர்க்க தடுமாறும் ஷிகர் தவணுக்கு நெருக்கடி

போர்ட் ஆஃப் ஸ்பெயின்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றும்.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் கயானாவில் நடைபெற்ற முதல் ஆட்டம் மழை காரணமாக ரத் தானது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 59 ரன்கள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றது. இதனால் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை 2-0 என வெல்லும். தொடக்க வீரரான ஷிகர் தவண் குறுகிய வடிவிலான போட்டிகளில் கடந்த 4 ஆட்டங்களில் சிறப்பாக செயல்படத் தவறினார். மேற்கிந் தியத் தீவுகளுக்கு எதிரான 3 ஆட் டங்கள் கொண்ட டி 20 தொடரில் முறையே 1, 23, 3 ரன்கள் மட் டுமே சேர்த்த ஷிகர் தவண் 2-வது ஒருநாள் போட்டியில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றம் அளித்தார்.

ஏற்கெனவே அணிக்குள் இடம் பிடிக்க இளம் வீரர்கள் இடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் மீண்டும் தனது இழந்த பார்மை மீட்டெக்க வேண்டிய நிலையில் ஷிகர் தவண் உள்ளார். தற்போதைய சுற்றுப்பயணத்தில் ஷெல்டன் காட்ரெல் பந்து வீச்சில் இருமுறை ஷிகர் தவண் ஆட்டமிழந்திருந்தார். இதனால் அவரது பந்து வீச்சை கூடுதல் கவனமுடன் எதிர்கொள்வதில் ஷிகர் தவண் தீவிரம் காட்டக்கூடும்.

மேலும் டெஸ்ட் அணியில் இடம் பெறாததால் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தை சிறப்பான முறையில் நிறைவு செய்யும் வித மாக உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தவும் ஷிகர் தவண் முயற்சிக்கக்கூடும். பேட்டிங் வரி சையில் 4-வது இடத்துக்கான தேட லில் உள்ள ஸ்ரேயஸ் ஐயர் கடந்த ஆட்டத்தில் 68 பந்துகளில் 71 ரன்கள் சேர்த்து கவனத்தை ஈர்த்தார். அவரது சிறப்பான செயல் பாடு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.

ரிஷப் பந்ந்துக்கு அணி நிர் வாகம், கேப்டன் விராட் கோலி ஆகியோரது ஆதரவு இருந்து வரும் போதிலும் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தத் தவறுவது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. 4-வது இடத்தில் களமிறங்கும் ரிஷப் பந்த் முக்கி யமான கட்டங்களில் தனது விக் கெட்டை எளிதாக தாரைவார்ப்பது பெரிய பலவீனமாக உள்ளது. இதனால் அவரை இறுதிக்கட்ட ஓவர்களில் பயன்படுத்தும் விதமாக 5 அல்லது 6-வது இடத்தில் களமிறக்குவது குறித்து அணி நிர்வாகம் ஆலோசிக்கக்கூடும்.

ரிஷப் பந்த்தின் பேட்டிங் வரிசை மாற்றப்படும் பட்சத்தில் 4-வது வீர ராக ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கக் கூடும். 11 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு கடந்த ஆட்டத்தில் தனது 42-வது சதத்தை விளாசியுள்ள விராட் கோலியிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும். பந்து வீச்சில் புவனேஷ்வர் குமார், மொகமது ஷமி, குல்தீப் யாதவ் கூட்டணி நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளது. இன்றைய ஆட்டத்தில் கலீல் அகமதுக்கு பதிலாக நவ்தீப் சைனி இடம் பெற வாய்ப்பு உள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி யானது ஒருநாள் போட்டித் தொடரை இழக்காமல் இருக்க வேண்டுமானால் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் களமிறங்குகிறது. தொடக்க வீரரான கிறிஸ் கெயில் பார்மின்றி தவிப்பது அணியை வெகுவாக பாதித்துள்ளது. ஷாய் ஹோப், ஷிம்ரன் ஹெட் மையர், நிக்கோலஸ் பூரண் உள்ளிட்டோர் பொறுப்புடன் விளையாடி ரன்கள் குவித்தால் இந்திய அணிக்கு சவால் கொடுக்க முயற்சிக்கலாம்.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் ஷைனி.

மேற்கிந்தியத் தீவுகள்: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெயில், ஜான் கேம்பல், எவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், ராஸ்டன் சேஸ், ஃபேபியன் ஆலன், கார்லோஸ் பிராத்வெயிட், கீமோபால், ஷெல்டன் காட்ரெல், ஓஷன் தாமஸ், கேமார் ரோச்.

நேரம்: இரவு 7

இடம்: போர்ட் ஆஃப் ஸ்பெயின்

நேரலை: சோனி டென் 1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x