செய்திப்பிரிவு

Published : 13 Aug 2019 18:59 pm

Updated : : 13 Aug 2019 18:59 pm

 

இந்தியாவுக்கு எதிரான டி20: புதிய கேப்டனுடன் களமிறங்கும் தெ.ஆ; டெஸ்ட் அணியில் 3 புதுமுகங்கள்

india-tour-sa-announces-new-captain-for-t20-s-3-new-faces-in-test-squad

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு செப்டம்பரில் டெஸ்ட், டி20 போட்டிகளில் ஆடும் தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் அணியில் 3 புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

டி20 அணிக்கு புதிய கேப்டனாக குவிண்டன் டி காக் நியமிக்கப்பட்டுள்ளார், இவருக்கு துணையாக வான் டெர் ட்யூசன் செயல் படவுள்ளார்.

டி20 தொடர் முடிந்தவுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு 150கிமீ வேகத்தில் வீசும் ஆன்ரிச் நோர்ட்யே, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரூடி செகண்ட் மற்றும் ஸ்பின் பவுலிங் ஆல்ரவுண்டர் சேனுரன் முத்துசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் அணியில் ஃபாப் டு பிளெசிஸ் கேப்டன் இவருக்கு துணை கேப்டனாக தெம்பா பவுமா செயல்படுவார்.

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி:

டுப்ளெசிஸ் (கேப்டன்), தெம்பா பவுமா (துணை கேப்டன்), தியூனிஸ் டி புருய்ன், குவிண்டன் டி காக், டீன் எல்கர், ஜுபைர் ஹம்சா, கேஷவ் மகராஜ், அய்டன் மார்க்ரம், சேனூரான் முத்துசாமி, லுங்கி இங்கிடி, ஆன்ரிச் நோர்ட்யே, வெர்னன் பிலாண்டர், டேன் பியட், கேகிஸோ ரபாடா, ரூடி செகண்ட்.

டி20 அணி:

குவிண்டன் டி காக் (கேப்டன்), ரஸி வான் டெர் டியூசன், தெம்பா பவுமா, ஜூனியர் டாலா, பிஜான் போர்ட்டுயின், பியூரன் ஹென்றிக்ஸ், ரீசா ஹென்றிக்ஸ், டேவிட் மில்லர், ஆன்ரிச் நோர்ட்யே, ஆண்டில் பெலுக்வயோ, டிவைன் பிரிடோரியஸ், கேகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஸி, ஜோன் ஜோன் ஸ்மட்ஸ்

தென் ஆப்பிரிக்கா அணியின் இந்தியப் பயணம்டி20 டெஸ்ட் அணிகள் அறிவிப்புகுவிண்டன் டி காக்டுப்ளெசிஸ்தெம்பா பவுமாசேனூரான் முத்துசாமிகிரிக்கெட்India Tour: SA announces new captain for T20's; 3 new faces in test Squad

Popular Articles

You May Like

More From This Category

More From this Author