டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

டிஎன்பிஎல் கிரிக்கெட் இறுதிச் சுற்றில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
Updated on
1 min read

திருநெல்வேலி

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிச் சுற்றில் விளையாட சேப் பாக் சூப்பர் கில்லீஸ் அணி தகுதி பெற்றுள்ளது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொட ரின் முதல் தகுதிச் சுற்று ஆட் டம் (குவாலிபையர்) திருநெல் வேலியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சேப்பாக் சூப் பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

முன்னதாக சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கங்கா தர் ராஜு சிறப்பாக விளையாடி 54 பந் தில் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்களைக் குவித்தார். கோபி நாத் 16, கவுசிக் காந்த் 5, விஜய் சங் கர் 6, உத்திரசாமி சசிதேவ் 26, ஹரிஷ்குமார் 8, முருகன் அஸ் வின் 14, உமாசங்கர் சுஷில் 4 ரன்கள் எடுத்தனர்.

திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த், பிரணீஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஆர்.அஸ் வின், சிலம்பரசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி னர்.

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஹரி நிஷாந்த் 29, ஜெகதீசன் 37, ஆர்.அஸ்வின் 22, ஆர்.விவேக் 20, சுமந்த் ஜெயின் 14, சதுர்வேத் 14 ரன்கள் எடுத்தனர். கடைசி ஓவரின் 2 சிக்ஸர்களை மொக மது விளாசியபோது திண்டுக்கல் அணிக்கு வெற்றி கிடைக்க வில்லை. இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம் கண்டது.

சேப்பாக் அணியின் பெரியசாமி 3, முருகன் அஸ்வின், ஹரிஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in