

மான்ட்ரியல்
கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா- கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி தோல்வி கண்டது.
நேற்று நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா- டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி, நெதர்லாந்தின் ரோபின் ஹாஸ்-வெஸ்லி கோல்ஹாப் ஜோடியுடன் மோதியது.
இதில் போபண்ணா-ஷபோவலோவ் ஜோடி 6-7 (3-7), 6-7 என்ற செட் கணக்கில் ரோபின் ஹாஸ்-வெஸ்லி கோல்ஹாப் ஜோடியிடம் தோல்வி கண்டு வெளியேறியது.
இறுதிச் சுற்றில் ஹாஸ்-கோல்ஹாப் ஜோடி ஸ்பெயினின் மார்செல் கிரனோலர்ஸ்-ஹோராசியா ஜெபலோஸ் ஜோடியை எதிர்த்து விளையாடவுள்ளது. பிடிஐ