

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றுப் போன இங்கிலாந்து அணி லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் மீண்டெழுந்து பதிலடி கொடுக்க முழுமுனைப்புடன் உள்ளது.
இதனையடுத்து அந்த அணியில் ஆல்ரவுண்டர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார், ஜாக் லீச் என்ற ஸ்பின்னர் சேர்க்கப்பட்டு மொயின் அலி வெளியே அனுப்பப்பட்டார்.
எட்ஜ் பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் 172 ரன்கள் கொடுத்து 3 விக்கெட், பேட்டிங்கில் ஜீரோ மற்றும் 4 என்று சொதப்பினார் மொயின் அலி. மேலும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் நேதன் லயனிடம் ஆட்டமிழந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 முறை அவுட் ஆனதில் 9 முறை நேதன் லயன் இவரை வீழ்த்தியிருக்கிறார்.
ஜாக் லீச் அயர்லாந்துக்கு எதிராக சொதப்பிய இங்கிலாந்து அணியின் 2வது இன்னிங்சில் இரவுக்காவலனாக இறங்கி 92 ரன்களை எடுத்து மேன் ஆப் த மேட்ச் விருது பெற்றார்.
லார்ட்ஸ் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து அணி:
ஜோ ரூட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரண், ஜோ டென்லி, ஜேக் லீச், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.