

ஆஷஸ் தொடர் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 1 விக்கெட்டை மட்டும் இழந்து 260 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர் ராஜர்ஸ், 3-ம் நிலை வீரர் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் சதம் எடுத்து ஆடி வருகின்றனர்.
வார்னர் விக்கெட் விழுந்த பிறகு ஸ்மித், ராஜர்ஸ் கூட்டணியை பிரிக்க முடியாமல் இங்கிலாந்து பவுலர்கள் திணறி வருகின்றனர்.
இன்று முதல் நாள் ஆட்டத்தில் இன்னமும் 19 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் ராஜர்ஸ் 109 ரன்களுடனும், ஸ்மித் 103 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் இணைந்து ஆட்டமிழக்காமல் 182 ரன்களை இதுவரை சேர்த்துள்ளனர்.
சுத்தமாக மழிக்கப்பட்ட பேட்டிங் பிட்சைப் போட்டு இங்கிலாந்து தனக்குத் தானே குழிதோண்டிக் கொண்டதாக விமர்சகர்களும், வர்ணனையாளர்களும் கூறிவருகின்றனர்.
ராஜர்ஸ் 19 பவுண்டரிகளையும், ஸ்மித் 9 பவுண்டரி 1 சிக்சர் அடித்துள்ளனர்.
கடந்த முறை இந்தியாவுக்கு எதிராக ‘கிரீன் டாப்’ விக்கெட்டை கொடுத்து இஷாந்த் சர்மாவின் ‘வேகத்துக்கே’ சுருண்ட நினைவு இன்னமும் இங்கிலாந்து கேப்டன் குக்கை விட்டு அகலவில்லை போலும்.