என்ன ஆயிற்று சுரேஷ் ரெய்னாவுக்கு? 6 வாரங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

என்ன ஆயிற்று சுரேஷ் ரெய்னாவுக்கு? 6 வாரங்கள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு
Updated on
1 min read

இந்திய கிரிக்கெட் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் வீரருமான சுரேஷ் ரெய்னா 6 வார காலங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியுள்ளார்.

இவருக்கு வெள்ளிக்கிழமையன்று ஆம்ஸ்டர்டாமில் முழங்கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து அவர் மீண்டு வர குறைந்தது 6 வார கால புனரமைப்பு சிகிச்சை, பயிற்சிகள் தேவைப்படுவதால் கிரிக்கெட்டிலிருந்து குறுகிய காலத்துக்கு விலகியுள்ளார் சுரேஷ் ரெய்னா.

இந்த அறுவை சிகிச்சை மற்றும் விலகினால் சுரேஷ் ரெய்னா 2019-20 உள்நாட்டுத் தொடர்களில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால்தான் துலிப் கோப்பை அணிகளான இந்தியா, ரெட், இந்தியா ப்ளூ, இந்தியா பச்சை அணிகளில் அவர் எதிலும் இடம்பெறவில்லை.

செப்டம்பரில் விஜய் ஹசாரே டிராபிக்கு சுரேஷ் ரெய்னா தயாராகவில்லை எனில் அது உத்தரப் பிரதேச கிரிக்கெட்டுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

சுரேஷ் ரெய்னா 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் சர்வதேச போட்டிகள், 78 டி20 போட்டிகள், ஆடியுள்ளார், இங்கிலாந்துக்கு எதிராக லீட்ஸ் மைதானத்தில் ஜூலை 2018-ல் கடைசியாக இந்தியாவுக்காக ஆடினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in