நீங்கள் அழகாக இல்லை: ட்விட்டர் பயனருக்கு ஆர்ச்சரின் சுவாரசிய பதில்

நீங்கள் அழகாக இல்லை: ட்விட்டர் பயனருக்கு ஆர்ச்சரின் சுவாரசிய பதில்
Updated on
1 min read

தன்னை ட்விட்டரில் அழகாக இல்லை என்று விமர்சித்தவருக்கு அனைவரும் பாராட்டும் வகையில் பதிலளித்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர்.

சினிமா, விளையாட்டு என பல துறைகளில் உள்ள பிரபலங்கள் தங்களுக்கென்று தனிப்பட்ட யூ டியூப் சேனல் தொடங்கி அதில் தங்களது அன்றாட நிகழ்வுகளைப் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் பொதுமக்களுடனும், தங்களது ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடிவதால் யூ டியூப் சேனல் தொடங்கும் பிரபலங்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இங்கிலாந்து அணி முதன்முதலாக உலகக் கோப்பையை வெல்வதற்குக் காரணமாயிருந்த விரர்களில் ஒருவர் ஜோஃப்ரா ஆர்ச்சர். இவர் யூ டியூப் பக்கத்தில் தனக்கான கணக்கைத் தொடங்கி தனது அன்றாட நிகழ்வுகளைப் பதிவிடத் தொடங்கியுள்ளார்.

தனது முதல் வீடியோவை ஆர்ச்சரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஆர்ச்சர் கிரிக்கெட் தவிர்த்து தனது குடும்பத்துடன் செலவிடும் காட்சிகள், வீடியோ கேம்ஸ் விளையாடுவது, கால்பந்தாட்டம் விளையாடுவது போன்றவை இடம் பெற்றுள்ளன.

இதில் ஆர்ச்சரின் ட்விட்டர் பதிவுக்குக் கீழே, ''நீங்கள் அழகாக இல்லை'' என்று ட்விட்டர் பயனாளர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

இதைக் குறிப்பிட்ட ஆர்ச்சர், ''ஆனால், நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்'' என்று பக்குவமாகப் பதில் அளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in