தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்குப் பதிலாக நைஜீரியா

தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்குப் பதிலாக நைஜீரியா
Updated on
1 min read

நிர்வாகச் சீர்கேட்டுப் பிரச்சினைகளினால் ஐசிசி-யினால் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்யப்பட்ட ஜிம்பாப்வே அணிக்குப் பதிலாக நைஜீரியா அணியை ஆடவர் உலக டி20 தகுதிச் சுற்றுப் போட்டிகளில் களமிறக்க ஐசிசி முடிவெடுத்துள்ளது.

அதே போல் ஜிம்பாப்வே தடையினால் மகளிர் உலக டி20 தகுதி சுற்றுகளில் நமீபியா மகளிர் அணிக்கு விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபரில் நடைபெறுகிறது, இதில் நைஜீரியா, யுஏஇ, ஹாங்காங், அயர்லாந்து, ஜெர்சி, கென்யா, நமீபியா, நெதர்லாந்து, ஓமன், பபுவா நியுகினியா, ஸ்காட்லாந்து, சிங்கப்பூர், மேலும் இரண்டு அணிகள் அமெரிக்காஸ் பைனலிலிருந்து தகுதி பெறும்.

இந்தத் தகுதிச் சுற்றுகளில் டாப் 6 அணிகள் 2020 உலக டி20 கோப்பை போட்டித் தொடரில் நுழையும்.

டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் இந்த டாப் 6 அணிகள் வங்கதேசம், இலங்கை ஆகியவற்றுடன் முதல் சுற்றில் இணையும். இந்த 8 அணிகள் 4 அணிகள் கொண்ட இரு பிரிவுகளாக பிரிக்கப்படும். இதிலிருந்து ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் டாப் 2 அணிகள், ஆக மொத்தம் 4 அணிகள் பிரதானச் சுற்றில் மோதும் 8 அணிகளுடன் இணைந்து உலக டி20 சூப்பர் 12 அணிகளுக்கு இடையிலான தொடராக நடைபெறும்.

2020 உலக டி20 ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in