அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவிலிருந்து பி.வி.சிந்துவுக்கு மட்டும் இடம்

அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள்: ஃபோர்ப்ஸ் பட்டியலில் இந்தியாவிலிருந்து பி.வி.சிந்துவுக்கு மட்டும் இடம்
Updated on
1 min read

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிகம் வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவிலிருந்து பி.வி. சிந்து மட்டும் இடம் பெற்றுள்ளார்.

2019 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையில் அதிகம் வருமானம் ஈட்டும் விளையாட்டு வீராங்கனைகளின் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலிருந்து பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்து மட்டும் இடம் பெற்றுள்ளார்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 15 பேர் கொண்ட இந்தப் பட்டியலில், ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறும் சிந்து 13 ஆம் இடத்தில் இருக்கிறார்.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளார். ஆண்டுக்கு செரினா சுமார் 3 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா இடம் பெற்றுள்ளார். அவரது ஆண்டு வருமானம் இரண்டரை கோடி ரூபாய் ஆகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in