ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் ஓய்வு

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹாரிஸ் ஓய்வு
Updated on
1 min read

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலியா வின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரியான் ஹாரிஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித் துள்ளார்.

குறுகிய காலமே விளையாடிய போதும் ஆஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராகத் திகழ்ந்த ரியான் ஹாரிஸுக்கு முழங்கால் வடிவில் வந்தது பிரச்சினை. தொடர்ச்சியாக முழங்காலில் ஏற்பட்டு வந்த காயம் இப்போது அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வந்துள்ள ரியான் ஹாரிஸ் பயிற்சி போட்டியில் விளையாடியபோது அவருடைய முழங்காலில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டதில் வலது முழங் காலில் உள்ள மூட்டுப்பகுதி பெரிய அளவில் சேதமடைந்திருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஓய்வு முடிவை எடுத்துள்ளார் ரியான் ஹாரிஸ்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: எனது மூட்டு சேதமடைந்திருப்பது தொடர்பான தகவல் நேற்று (நேற்றுமுன்தினம்) எனக்கு தெரியவந்தது. அதைத் தொடர்ந்து காயம் தொடர்பாக எனது குடும்பத்தினரிடம் பேசினேன். அதன்பிறகு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என்பதை தெரிந்துகொண்டேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கை மிக அற்புதமானதாக அமைந்ததில் நான் அதிர்ஷ்டசாலியே. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பச்சை நிற தொப்பியை அணிந்து விளையாடுவதைவிட வேறு எதுவும் எனக்கு பெருமையை தந்துவிட முடியாது. நான் 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியி ருக்கிறேன். அந்தப் போட்டிகளின் அனைத்து தருணங்களையும் மிக மகிழ்ச்சியாக ரசித்து விளையாடி யிருக்கிறேன்.

தற்போதைய ஆஸ்திரேலிய அணி மிகச்சிறந்த அணியாகும். அவர்கள் இந்த ஆஷஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு பெருமை சேர்ப்பார்கள். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நான் சந்தித்த ஏற்ற, இறக்கங்களின் போது எனது குடும்பத்தினர் எனக்கு ஆதரவளித்தனர். அந்த வகையில் நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை எனது குடும் பத்தினருடன் செலவிடவுள்ளேன் என்றார்.

35 வயதான ஹாரிஸ் 2010-ம் ஆண்டு தனது 30-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக மானார். இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2013-ல் செஸ்டர் லீஸ்டிரீட்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 117 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டு களை வீழ்த்தியதே ஹாரிஸின் சிறந்த பந்துவீச்சு ஆகும். இதுதவிர 21 ஒருநாள் போட்டிகளில் விளை யாடியுள்ள ஹாரிஸ் 44 விக்கெட்டு களை வீழ்த்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in