சர்பராஸ் அகமெட்-ஐ கேப்டன்சியிலிருந்து தூக்குங்கள், நான் அணியை எங்கு கொண்டு செல்கிறேன் பாருங்கள்: கோச் மிக்கி ஆர்தர் சூளுரை

சர்பராஸ் அகமெட்-ஐ கேப்டன்சியிலிருந்து தூக்குங்கள், நான் அணியை எங்கு கொண்டு செல்கிறேன் பாருங்கள்: கோச் மிக்கி ஆர்தர் சூளுரை
Updated on
1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து சர்பராஸ் அகமெட்டை தூக்குங்கள் இன்னும் 2 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியை எங்கு கொண்டு செல்கிறேன் பாருங்கள் என்று பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை மேற்கொண்டதாக அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் தனக்கு 2 ஆண்டுகள் நீட்டிப்பு அளித்தால் அணியை வேறு நிலைக்கு கொண்டு செல்வேன் என்றும் மிக்கி ஆர்தர் கூறியுள்ளதாகத் தெரிகிறது. 

சர்பராஸ் அகமெடுக்குப் பதிலாக ஷதாப் கானை கேப்டனாக்குமாறும் டெஸ்ட் போட்டிகளுக்கு பாபர் ஆஸமை கேப்டனாக்குங்கள் என்றும் மிக்கி ஆர்தர் பரிந்துரை மேற்கொண்டுள்ளார். 

ஆனால் பாகிஸ்தான் பயிற்சியாளரின் வாதங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது, குறிப்பாக பீல்டிங் பயிற்சியாளராக இருந்த ஆஸ்திரேலியாவின் ஸ்டிவ் ரிக்சனுக்கு சம்பளம் தாமதமாக வழங்கப்பட்டதால் அவர் விலகினார் என்று ஆர்தர் குறிப்பிட்டது வாரியத் தலைகளுக்குப் பிடிக்கவில்லை என்றும் பாக். கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மகேலா ஜெயவர்தனேயைப் பாகிஸ்தான் பயிற்சியாளராக்கலாம் என்று உறுப்பினர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளார், ஆனால் மும்பை இந்தியன்ஸ் அளவுக்கு ‘பேக்கேஜ்’ நம்மால் கொடுக்க முடியாது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கருதுவதாகத் தெரிகிறது. 

-பிடிஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in