Published : 05 Aug 2019 10:01 AM
Last Updated : 05 Aug 2019 10:01 AM

நவ்தீப் சைனிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது: விராட் கோலி பாராட்டு

லாடர்ஹில்

வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரி வித்தார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள லாடர்ஹில் மைதானத்தில் நேற்று முன்தினம் இந்தியா, மேற்கிந்தியத் தீவு அணிகள் மோதிய முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது.

பின்னர் விளையாடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. இந்திய அணியின் அணியின் ரோஹித் சர்மா 24, ஷிகர் தவண் 1, விராட் கோலி 19, மணீஷ் பாண்டே 19, கிருணல் பாண்டியா 12 ரன்கள் எடுத்தனர். ரவீந்திர ஜடேஜா 10, வாஷிங்டன் 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

3 விக்கெட்களை வீழ்த்திய நவ்தீப் சைனி ஆட்டநாயகனாக தேர்வு பெற்றார். வெற்றி பெற்றது குறித்து விராட் கோலி கூறும்போது, “நவ்தீப் சைனி மிக அருமையாக பந்துவீசினார். அவரிடம் உள்ள திறமையால் அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். தற்போது இந்திய அணியில் இடம்பிடித்து முதல் போட்டியிலேயே 3 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். அவருக்கு எனது பாராட்டுக்கள். அவரது திறமை அசாத்தியமானது. நாள் முழுவதும் பந்துவீசச் சொன்னாலும் அசராமல் வீசுவார். அந்த அளவுக்கு அவரது உடற்தகுதி அருமையாக உள்ளது. இந்த ஆட்டத்தில் எங்களது பவுலிங், பீல்டிங் சிறப்பாக அமைந்தது.

ஆனால் ஆடுகளம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. சில தினங்களாக மழை பெய்ததால் ஆடுகளத்தின் தன்மை மாறியுள்ளது” என்றார். பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x