Published : 04 Aug 2019 09:56 AM
Last Updated : 04 Aug 2019 09:56 AM

அர்ஜென்டினா கால்பந்து கேப்டன் மெஸ்ஸிக்கு 3 மாதம் தடை

அசன்சியான

கோபா அமெரிக்கா எனும் கால் பந்து போட்டித்தொடர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறியதற்காக அர்ஜென்டினா அணி கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸிக்கு சர்வதேச கால் பந்து போட்டிகளில் பங்கேற்ப தற்கு 3 மாதங்கள் தடை விதிக்கப் பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற கோபா கால்பந்து தொடரின் மூன்றாவது இடத்தை பெறும் அணிக்கான போட்டியில் சிலி, அர்ஜென்டினா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிலியை வென்ற பிறகு பேட்டியளித்த மெஸ்ஸி, "இந்த கோப்பை பிரேசிலுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்தப் போட்டியில் ஊழல் மலிந்துவிட் டது. ஊழலும், கால்பந்து நடுவர்கள் கால்பந்து விளையாட்டின் சுவாரஸ் யத்தைக் கெடுக்கின்றனர் என்று குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, மெஸ்ஸிக்கு சர்வதேச போட்டிகளில் விளை யாடுவதற்கு மூன்று மாதங்கள் தடையும், 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதத்தையும் தென் அமெரிக்கா கால்பந்து கூட்டமைப்பு (கான்மெபோல்) விதித்துள்ளது. பராகுவே நாட்டின் அசன்சியான் நகரில் நடைபெற்ற கான்மெபோல் நிர்வாகிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முடிவை எதிர்த்து மெஸ்ஸி முறையீடு செய்வதற்கு ஒருவார காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை மெஸ்ஸி மீதான இந்த தடை நீக்கப்படாவிட்டால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் சிலி, மெக்ஸிகோ மற்றும் ஜெர்மனியுடன் நடைபெற உள்ள போட்டிகளில் அவர் பங் கேற்க முடியாத நிலை ஏற்படும்.

மெஸ்ஸிக்கு 3 மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவரது ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏஎப்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x