Published : 02 Aug 2019 06:12 PM
Last Updated : 02 Aug 2019 06:12 PM

பால் டேம்பரிங் விவகாரத்தில் ‘கிட் பேக்’ஐ விட்டெறிந்த ஸ்மித்தின் தந்தை: சதத்துக்குப் பிறகு நெகிழ்ச்சி

தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டி ஒன்றில் பால் டேம்பரிங் செய்ததாக ஸ்மித், வார்னர், பேங்கிராப்ட் சிக்கிய போது ஸ்மித்தின் தந்தை தன் மகன் மீதுள்ள கோபத்தில் அவரது கிரிக்கெட் கிட்பேக்-ஐ கார் ஷெட்டில் தூக்கி எறிந்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. 

ஆனால் ஓராண்டுகாலத் தடைக்குப் பிறகு மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் அதிர்ஷ்டவசமாக நேரடியாக இடம்பெற்ற ஸ்மித், வார்னரில், நேற்று எட்ஜ்பாஸ்டனில் வார்னர் சொதப்பிவிட ஸ்டீவ் ஸ்மித் தன் அபாரமான பார்மைத் தொடர்ந்து 144 ரன்கள் குவித்து அணியை இக்கட்டிலிருந்து மீட்டு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 

இந்நிலையில் ஸ்மித்தின் தந்தை பீட்டர் ஸ்மித், தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் கூறும்போது, “ஸ்மித்திற்கு இது பெரிய ரிலீஃப்தான், நாமும் அவருடன் இதனைப் பகிர்ந்து கொள்கிறோம். 

மீண்டும் வந்து இந்தச் சதத்தை எடுத்ததன் பின்னணியில் ஸ்மித்தின் மிக மிக மிகக் கடுமையான உழைப்பு இருந்தது, ஸ்மித்தும் என்னிடம் இதைத்தான் சொன்னான். மிகவும் கடினமான இன்னிங்ஸ் இது. இந்தச் சதத்தில் அந்தக் கடினம் தெரிந்தது, இது அவனிடம் ஏற்படுத்திய விளைவிலிருந்து நாம் அதை ஊகிக்க முடிகிறது. 

தடைக்காலம் மிகவும் மோசமானது, அதனால்தான் அவனுடனேயே நாங்களும் செல்ல வேண்டியிருந்தது. 

ஆனால் எனக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு நடுக்கமும் பயமும் தொடக்கத்தில் இருந்தது, இது எனக்கு அன்னியமானதே. பிறகு இந்த சதம் அமைந்தது, அதனால் இப்போது உணர்ச்சிவயப்பட்ட நிலையில் உள்ளேன். சதம் எடுத்ததைப் பார்த்த போது உணர்ச்சி மேலிட்டது. இன்னும் கூட நான் உணர்ச்சிகரமாகத்தான் இருக்கிறேன். 

ஆனாலும் கடந்த ஆஷஸ் தொடரில் பிரிஸ்பனில் இவன் அடித்த செஞ்சுரிதான் என்னைப் பொறுத்தவரையில் சிறந்த சதமாகும்.  ஆனால் இந்தச் சதம் வந்த சூழலினால் இதுவும் பெரிய சதம்தான் இது அவனுடைய சிறந்த சதம் இல்லை என்றாலும் ஒருவகையில் அந்த இடத்தில் உள்ளது.” என்றார் பீட்டர் ஸ்மித்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x