‘பயிற்சியாளர் தேர்வில் தன் கருத்தைத் தெரிவிக்க விராட் கோலிக்கு அனைத்து உரிமையும் உண்டு’

‘பயிற்சியாளர் தேர்வில் தன் கருத்தைத் தெரிவிக்க விராட் கோலிக்கு அனைத்து உரிமையும் உண்டு’
Updated on
1 min read

பயிற்சியாளர் தேர்வில் தன் கருத்தையும் தன் தெரிவையும் கூற கேப்டனுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, நடப்பு கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

ரவிசாஸ்திரியே தொடர்ந்தால் மகிழ்ச்சியடைவேன் என்று விராட் கோலி தெரிவித்தார், ஆனால் சிஏசி குழுவில் இருக்கும் முன்னாள் பயிற்சியாளர் அன்ஷுமன் கெய்க்வாட், கோலி என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும் நாங்கள் எங்கள் அளவுகோலின் படி, பிசிசிஐ வழிகாட்டுதலின் படி தேர்வு செய்வோம், பிசிசிஐ விராட் கோலியை கலந்தாலோசிக்கச் சொன்னால் கலந்தாலோசிப்போம் என்று தெரிவித்தார். 

இந்நிலையில் முன்னாள் கேப்டன் ‘தாதா’ சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது:

கோலிதான் கேப்டன் ஆகவே அவருக்கு அனைத்து உரிமைகளும் உண்டு. இது குறித்து கெய்க்வாட் கூறியது பற்றி நான் கருத்துக் கூற எதுவும் இல்லை, ஒவ்வொரு தனிநபருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். 

பிரித்வி ஷா விவகாரத்தில் இருமல் மருந்தில் பல காம்பினேஷன்கள் உள்ளன. பிரித்வி ஷா விஷயத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஆகவே நான் கருத்துக் கூறுவது முறையாகாது. 

இவ்வாறு கூறினார் கங்குலி.

-பிடிஐ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in