ஸ்டார்க், ஹேசில்வுட் இல்லை: ஆஸ்திரேலியா பேட்டிங்

ஸ்டார்க், ஹேசில்வுட் இல்லை: ஆஸ்திரேலியா பேட்டிங்
Updated on
1 min read

ஆஷஸ் டெஸ்ட் 2019 முதல் டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது, இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.

அணியில் ஸ்டார்க், ஹேசில்வுட் இருவருமே இல்லை. பீட்டர் சிடில் அணிக்குள் இருக்கிறார், நீண்ட இடைவேளைக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் பேட்டின்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மேகமூட்டமான வானிலை உள்ளது, முதல் நாள் பிட்ச், இங்கிலாந்தின் வலுவான பந்துவீச்சுக்கு எதிராக பேட்டிங் எடுத்த டிம் பெய்ன் கூறும்போது, பிட்ச் வறண்டு, வன்மையாக உள்ளது நல்ல ஸ்கோரை எடுத்து பிறகு 2வது இன்னிங்சில் நேதன் லயன் பந்து வீச்சு இருக்கவே இருக்கிறது என்கிறார்.

ஆனால் ஜோ ரூட், முதலில் பவுலிங் செய்ய வேண்டியது பற்றி எந்த ஏமாற்றமும் அடையவில்லை. 

ஆஸி. அணி:

வார்னர், கேமரூன் பேங்கிராப்ட், கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ட்ராவிஸ் ஹெட், மேத்யூ வேட், டிம் பெய்ன், பாட் கமின்ஸ், ஜேம்ஸ் பேட்டின்சன், நேதன் லயன், பீட்டர் சிடில்.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ரோரி பர்ன்ஸ், ஜோ ரூட், ஜோ டென்லி, ஜோஸ் பட்லர்,  பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், பிராட், ஆண்டர்சன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in