ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஜோப்ரா ஆர்ச்சருக்கு அணியில் இடம் இல்லை- இங்கி.யின் ஆச்சரிய அணித்தேர்வு

ஆஷஸ் முதல் டெஸ்ட்: ஜோப்ரா ஆர்ச்சருக்கு அணியில் இடம் இல்லை- இங்கி.யின் ஆச்சரிய அணித்தேர்வு
Updated on
1 min read

உலகக்கோப்பையில் கலக்கியவரும் பார்பேடோஸ் பூர்வீக வீரருமான ஜோப்ரா ஆர்ச்சர் முதல் ஆஷஸ் டெஸ்ட்டை ஆடும் கனவு எட்ஜ்பாஸ்டனில் வியாழக்கிழமை நிறைவேறாமல் போயுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அறிவித்த 11 வீரர்கள் கொண்ட அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் இடம்பெறவில்லை. இந்தத் திடீர் நீக்கம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

6 வாரங்களில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெறுவதால் நிச்சயம் ஏதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் ஜோப்ரா ஆர்ச்சர் அறிமுகம் செய்யப்படுவார் எனத் தெரிகிறது. 

ஜேம்ஸ் ஆண்டர்சனின் தொடக்க பவுலிங் கூட்டாளியாக ஸ்டூவர்ட் பிராட் வீசுவார், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் அடுத்த ‘கட்’ வீச்சாளர்களாக வீசுவார்கள். 

கேப்டன் ஜோ ரூட் 3ம் நிலையில் இறங்கவிருக்கிறார், இது தொடக்க வீரர்களின் பலவீனத்தால் மேற்கொண்ட முடிவாகத் தெரிகிறது.  ஜேசன் ராய் தன் 2வது டெஸ்ட் போட்டியில் ஆடுகிறார், அவருக்கு கடும் சோதனைகள் காத்திருக்கிறது.

ஆஸ்திரேலியா அணி 2001-ம் ஆண்டுக்குப் பிறகு இங்கிலாந்தில் ஆஷஸ் தொடரை வென்றதில்லை. 

இங்கிலாந்து அணி வருமாறு:

ரோரி பர்ன்ச், ஜேசன் ராய், ஜோ ரூட், ஜோ டென்லி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜானி பேர்ஸ்டோ (வி.கீ), மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், பிராட், ஆண்டர்சன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in