ஊக்க மருந்து விவகாரம்: இந்திய கிரிக்கெட்டின் வளரும் வீரர் பிரிதிவி ஷா சஸ்பெண்ட்

ஊக்க மருந்து விவகாரம்: இந்திய கிரிக்கெட்டின் வளரும் வீரர் பிரிதிவி ஷா சஸ்பெண்ட்
Updated on
1 min read

இந்திய டெஸ்ட் தொடக்க வீரரும், வளரும் நட்சத்திரமாகவும் கருதப்படும் பிரிதிவி ஷா, ஊக்கமருந்து சோதனையில் சிக்கி கிரிக்கெட்டிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ அறிவிப்பில், “பிரிதிவி ஷா தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை கவனக்குறைவாக எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது. இந்த தடைசெய்யப்பட்ட மருந்து இருமல் மருந்துகளில் பொதுவாக காணப்படுவதாகும்” என்று கூறப்பட்டுள்ளது. 

எனவே பிரிதிவி ஷாவுக்கு நவம்பர் 15, 2019 வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  அதாவது பிரிதிவி ஷா கடந்த பிப்ரவரி 22, 2019-ல் சையத் முஷ்டாக் அலி ட்ராபி போட்டிகளின் போது அளித்த சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட  ‘டெர்புடலின்’ என்ற மருந்து இருந்துள்ளது.

பிரிதிவி ஷா மூச்சுக்குழல் தொடர்பான பிரச்சினைகளுக்காக இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதில் இந்த டெர்புடலைன் இருந்ததால் அவர் கவனக்குறைவாகத் தெரியாமல் இதை எடுத்துக் கொண்டார், இது வாடாவினால் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தாகும். 

பிரிதிவி ஷா கூறும்போது,  திறனை ஊக்குவிக்கும் ஊக்க மருந்தாக இதை எடுத்துக் கொள்ளவில்லை, மூச்சுக்குழல் பிரச்சினைக்காக எடுத்து கொண்டேன் என்றார்.

பிப்ரவரி மாதமே இது தெரியவந்ததாலும் பிசிசிஐயின் ஊக்கமருந்து தடுப்பு விதிகளின் படி விருப்பத் தெரிவாக தகுதியிழப்பு அல்லது தடை நடவடிக்கை முன் தேதியிட்டு தொடங்கலாம் என்று இருப்பதாலும் 16 மார்ச், 2019 முதல் தடை தொடங்கி 8 மாதகாலத் தடை நவம்பர் 15, 2019வரை நீடிக்கும். ஆகவே நவம்பர் 15 நள்ளிரவு பிரிதிவி ஷா தடை நீங்கும். 

இவரோடு மட்டுமல்லாமல் விதர்பா கிரிக்கெட் வீரர் அக்‌ஷய் துல்லர்வார், ராஜஸ்தான் வீரர் திவ்ய காஜ்ராஜ், ஆகியோரும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் பிசிசிஐயினால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in