Published : 30 Jul 2019 02:57 PM
Last Updated : 30 Jul 2019 02:57 PM

கோலி கேப்டன் பொறுப்பு.. கவாஸ்கர் விமர்சனத்துடன் ‘மரியாதைக்குரிய முறையில் வேறுபடுகிறேன்’ - சஞ்சய் மஞ்சுரேக்கர்

இந்திய அணியில் கேப்டனாக நீடிப்பது கோலியின் விருப்பமா அல்லது அணியின் தேர்வுக்குழுவின்விருப்பமா என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடுமையாகச் சாடியதோடு, உலகக்கோப்பைக்குப் பிறகு கோலியின் கேப்டன்சி பற்றி சீராய்வு மேற்கொண்டு அவர் மீண்டும் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதை முறைப்படி அணித்தேர்வுக்குழு செய்திருக்க வேண்டும் என்றும் கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

கவாஸ்கரின் இந்தக் கருத்துக்கு சஞ்சய் மஞ்சுரேக்கர் தான் ‘கவாஸ்கர் சாருடன் மரியாதைக்குரிய விதத்தில் வேறுபடுகிறேன்’ என்று மாற்றுக் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மிட் டே நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில், “எனக்குத் தெரிந்தவரை உலகக் கோப்பைப் போட்டி வரை மட்டும்தான் இந்திய அணிக்கு விராட்கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், மேற்கிந்தி்யத்தீவுகள் தொடருக்கும் விராட் கோலி கேப்டனாக தொடர்கிறார்கள்.

விராட் கோலி கேப்டனாகத் தொடர்வது குறித்த எந்தவிதமான கூட்டமும், ஆலோசனையும் நடத்தாமல் தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடிப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

விராட் கோலி கேப்டனாக அணிக்கு தொடர்வது அவரின் விருப்பதின் அடிப்படையில் இருக்கிறதா அல்லது தேர்வுக்குழுவின் விருப்பத்தின் அடிப்படையில் கோலி தொடர்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. மீண்டும் கோலியை கேப்டனாக நியமித்து இருக்கிறோம் என்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி சொல்வதற்கு தேர்வுக்குழுவினருக்கு 5 நிமிடம் கூட கிடைக்கவில்லையா?” என்று சாடியிருந்தார்.

இந்நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் தனது பதிலில், “இந்திய அணித்தேர்வுக்குழுவினர் பற்றியும் விராட் கோலி பற்றியும் சுனில் கவாஸ்கர் சார் தெரிவித்த கருத்துகளுடன் முழு மரியாதையுடம் வேறுபடுகிறேன். இல்லை... இந்தியா நடந்து முடிந்து உலகக்கோப்பையில் அவ்வளவு ஒன்றும் மோசமாக ஆடிவிடவில்லை. 7 போட்டிகளில் வென்று 2-ல் மட்டுமே தோற்றிருக்கின்றனர், அதுவும் ஒரு போட்டி மிகவும் நெருக்கமாக வந்து தோற்றதாகும். அணித்தேர்வாளராக வெற்றியின் அளவு, ஒருவரின் உயர்வு ஆகியவற்றை விட நேர்மைதான் முக்கியமானதாகும்” என்கிறார் சஞ்சய் மஞ்சுரேக்கர். 

கவாஸ்கர் தன் பத்தியில், அடுத்த அணித்தேர்வுக்குழுவிலாவது உயர்வு படைத்த வீரர்கள் இடம்பெறட்டும் அப்போதுதான் அணி நிர்வாகத்தின் கைப்பாவையாக இருக்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார். அதற்குத்தான் சஞ்சய் மஞ்சுரேக்கர் உயர்வை விட நேர்மை முக்கியன் என்று பதிலளித்துள்ளார்.  

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x