கபடி அணிகளுக்கு பாராட்டு

கபடி அணிகளுக்கு பாராட்டு
Updated on
1 min read

சென்னை

மலேசியாவில் உள்ள மெலேகா நகரில் உலகக் கோப்பை கபடி போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 57-27 என்ற கணக்கில் ஈராக்கையும், மகளிரணி 47 - 29 என்ற கணக்கில் தைவான் அணியையும் வீழ்த்தி கோப்பையை வென்றன.

இந்நிலையில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிகள் நேற்று சென்னை திரும்பியது. அவர்களுக்கு நியூ கபடி பெடரேஷன் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நியூ கபடி பெடரேஷன் பொதுச் செயலாளர் பிரசாத் பாபு, தமிழக காவல்துறை டிஜிபி ரவி, உயர் நீதிமன்ற நீதிபதி டீக்காராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டினர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in