எனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே பிரச்சினையா? - கேப்டன் விராட் கோலி மறுப்பு

எனக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே பிரச்சினையா? - கேப்டன் விராட் கோலி மறுப்பு
Updated on
1 min read

உலகக்கோப்பை போட்டிகள் முடிவடைந்தவுடன் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதாகவும் அணிக்குள் இரு கோஷ்டிகள் இருப்பதாகவும் எழுந்த செய்திகள் முற்றிலும் பொய் என்று விராட் கோலி மறுத்துள்ளார். 

மே.இ.தீவுகள் பயணத்திற்கு  முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, “இது போன்ற பொய்கள் வெளியாகும் போது ஒரு வீரராகவும் அணியாகவும் குழப்பம் ஏற்படுகிறது. இது நம்பமுடியாததாக உள்ளது. அணிக்குள் இப்படிப்பட்ட விஷங்கள் இருந்தால் பின் எப்படி இது வரை சீராக ஆடிவர முடியும்? 7ம் இடத்திலிருந்து நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளோம். 

அணியில் சகோதரத்துவமும் நட்புறவும் இல்லையெனில் இந்த உயரத்தை எட்ட முடிந்திருக்க முடியாது. 

நான் ஒரு நபர் பற்றி பாதுகாப்பாக உணரவில்லை எனில் அதை நீங்கள் முகத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம், என் நடத்தையில் புரிந்து கொள்ளலாம். 

சமீபத்தில் இதே கேள்வியை உச்ச நீதிமன்றம் நியமித்த நிர்வாகக் கமிட்டியின் உறுப்பினர் விநோத் ராயிடம் கேட்ட போது, பத்திரிகையாளர்களை நோக்கி, ‘இது போன்ற கதைகளை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in