Published : 25 Jul 2019 06:17 PM
Last Updated : 25 Jul 2019 06:17 PM

பேட்டின்சனுக்காக இடத்தை இழப்பவர் யார்? ஸ்டார்க்கா? ஹேசில்வுட்டா?

ஆஸ்திரேலிய டெஸ்ட் வேகப்பந்து வீச்சு என்றாலே பாட் கமின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் என்ற மூவர் கூட்டணியின் ஆதிக்கம்தான் நினைவுக்கு வரும் ஆனால் இந்த மூவர் கூட்டணியில் உடைப்பை ஏற்படுத்தும் விதமாக தற்போது ஜேம்ஸ் பேட்டின்சன் என்ற இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் தன் காயத்திலிருந்து மீண்டு போராடி அணியில் இடம்பெற முன்னுரிமை கோரியுள்ளார். 

ஆஷஸ் தொடருக்கு முன்பாக கவுண்ட்டி கிரிக்கெட்டை விடவும் ஆக்ரோஷமான முறையில் சவுத்தாம்ப்டனில் ஆஸ்திரேலிய அணி தங்களுக்குள்ளேயே இரு அணிகளாகப் பிரிந்து டெஸ்ட் போட்டி போல் ஆடி பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டியூக் பந்துகளில் ஜேம்ஸ் பேட்டின்சன் அசத்தினார், அவரை ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களே சரியாக ஆட முடியவில்லை.

இது குறித்து பாட் கமின்ஸ் கூறும்போது, “ஆம், இப்போது ஆஸி. வேகப்பந்து வீச்சு வளமுடன் உள்ளது. நாங்கள் நால்வரும் நன்றாக ஆடிவந்தோம், பீட்டர் சிடிலும் நன்றாக வீசினார். மேலும் ட்ரெமய்ன், பேர்ட், நெஸர் ஆகியோரும் ஆஸி. ஏ அணிக்காக நன்றாக ஆடிவருகின்றனர். 

அணித்தேர்வாளர்களுக்குக் கடினம்தான் யாரை உட்கார வைப்பது, யாரை தேர்வு செய்வது என்ற பிரச்சினை உள்ளது.” என்றார் பாட் கமின்ஸ்.

இந்த பயிற்சியாட்டத்தில் 23 ஓவர்களில் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பேட்டின்சன். 

கமின்ஸ் மேலும் கூறும்போது, “அவர் தீப்பொறி பறக்க வீசும்போது பேட்டின்சன் மற்றவர்களை விட ஒரு படிமேலே இருக்கிறார். துரதிர்ஷ்டவசமாக சில ஆண்டுகள் அவரால் ஆட முடியவில்லை.  அவர் தன்னம்பிக்கையுடன் உள்ளார், அவரது தினத்தில் எந்த அணியையும் ஊதிவிடுவார்” இவ்வாறு கூறினார் கமின்ஸ்.

எனவே முதல் டெஸ்ட் போட்டிக்கு பேட்டின்சன் அணியில் வந்தால் ஒன்று ஸ்டார்க் வழி விட வேண்டும் அல்லது ஹேசில்வுட் வழிவிட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x