Published : 23 Jul 2019 10:12 AM
Last Updated : 23 Jul 2019 10:12 AM

ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு வருடமே உள்ளது: பயிற்சியாளர் இல்லாமல் தவிக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள்

புதுடெல்லி 

இந்திய டேபிள் டென்னிஸ் அணியின் பயிற்சி யாளராக பணியாற்றி வந்த மாஸிமோ காஸ் டான்டினி கடந்த ஆண்டு சொந்த காரணங்களுக் காக பதவியில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் புதிய பயிற்சி யாளராக டீஜன் பாபிக்கை நியமித்தது இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம். ஆனால் சுமார் 3 மாதங்கள் ஆகியும் டீஜன் பாபிக் இன் னும் இந்திய அணியினருடன் இணைய வில்லை. இதனால் ஜப்பானின் டோக்கியோ நகரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு சிறந்த முறையில் இந்திய அணி வீரர்கள் தயாராகுவதில் சிரமங்கள் எழுந்துள்ளது. மாஸிமோ காஸ்டான்டினி பயிற்சியின் கீழ் இந்திய டேபிள் டென்னிஸ் சீரான வளர்ச்சி கண்டிருந்தது.

காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளை யாட்டு ஆகியவற்றில் 60 ஆண்டு காலமாக பதக்கம் வெல்ல முடியாத ஏக்கங்கள் தீர்க்கப் பட்டிருந்தது. ஆனால் தற்போது பயிற்சியாளர் இல்லாமல் தங்களைத் தானே தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள்.

இதுகுறித்து இந்திய அணியின் சீனியர் வீரரான சரத் கமல் கூறுகையில், “மாஸிமோ காஸ்டான்டினி தனது குடும்ப பிரச்சினை காரணமாகவே விலகியிருந்தார். அதன் பிறகு புதிய பயிற்சியாளர் முடிவு செய்யப்பட்டுவிட்டார். ஆனால் அவர், எப்போது எங்களுடன் இணைவார் என்பது தெரியவில்லை. பயிற்சியாளர் இல்லாமல் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது என்பது கடினமான விஷயம்.

ஒற்றையர் பிரிவில் நான், சத்யன், மணிகா பத்ரா உள்ளிட்டோர் எங்களுக்கான பயிற் சிகளை சொந்தமாக நாங்களே கவனித்துக் கொள்கிறோம். ஆனால் இரட்டையர் பிரிவுக்கு சிறப்பு பயிற்சி தேவை” என்றார்.

இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளன அதிகாரி ஒருவர் கூறுகையில், “பாபிக் நியமனம் தொடர்பான பணிகளை இந்திய விளையாட்டு ஆணையம் முடித்து விட்டது. 5 நாட்களுக்கு முன்பு பாபிக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம். அதில், அவர் கையெழுத்திட்டு திருப்பு அனுப்புவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x