

மும்பை
மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்துக்கான இந்திய கிரிக் கெட் அணி வீரர்கள் தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது. இதில் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேனான தோனி தேர்வு செய்யப் படுவாரா? என்பதில் அனைவரது கவனமும் திரும்பியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த அணிக்கு எதிரா 3 டி 20 ஆட்டம், 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடு கிறது. முதற்கட்டமாக டி 20 தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி வீரர்களை தேர்வுக் குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தலைமையிலான குழு மும்பையில் இன்று தேர்வு செய்ய உள்ளது. இதற்கிடையே எதிர்காலத்தை கருத் தில் கொண்டு முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி இந்தத் தொடருக்கு தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்கும் திறனில் தோனி தேக்கம் அடைந்து வருவதால், அவரது பேட்டிங் திறன் சமீபகால மாக விவாதப் பொருளாக மாறியுள் ளது. உலகக் கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தோனி தனது எதிர்கால கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இன்னும் எதையும் தெரிவிக்கவில்லை.
அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ் திரேலியாவில் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு மேற்கிந் தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் தோனிக்கு பதிலாக இளம் விக் கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்தை தேர்வுக்குழுவினர் தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.
ஏனெனில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற மேற் கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி 20 தொடரில் தோனி நீக்கப்பட்டிருந் தார். இதேபோன்று இம்முறையும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் மேலோங்கியுள்ளதாக கருதப் படுகிறது. மேலும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள உள்நாட்டு சீசனை கருத்தில் கொண்டு குறுகிய வடி விலான போட்டிகளில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படக் கூடும் எனத் தெரிகிறது.
இது சாத்தியமானால் குறுகிய வடிவிலான தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப் படக்கூடும். அதேவேளையில் டெஸ்ட் தொடருக்கான அணியில் விராட் கோலி இடம் பெறுவார் என்றே தெரிகிறது. ஏனெனில் டெஸ்ட் தொடரானது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு அங்கமாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வும் இதே முறையில் அணுகப்படக்கூடும்.
தேர்வுக்குழுவினர் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசையை மறுசீரமைப் பதற்கான பணிகளையும் மேற் கொள்ளக்கூடும் என்று தெரிகிறது. ஏனெனில் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரை இறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியதற்கு மிடில் ஆர்டர் பேட்டிங் சரிவு பிரதான காரணமாக அமைந்தது. மேலும் பேட்டிங்கில் 4-வது இடத்தில் விளையாட உள்ள நிலையான வீரரை கண்டறிந்து முன்னோக்கி செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.
இதனால் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசைக்கு மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரது பெயர்கள் வலுவாக பரிசீலிக்கப்படக்கூடும். இவர்கள் 3 பேரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக அளவிலான ரன்களை வேட்டையாடிய போதிலும் தேசிய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியா ஏ அணியில் தற்போது விளையாடி வரும்மணீஷ் பாண்டே சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வ மற்ற 3-வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசி வெற்றிக்கான பங் களிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பதி ராயுடுவின் திடீர் ஓய்வு அறிவிப்பு, கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக் கொள்ளாத விஜய் சங்கர் ஆகியோரால் மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர் உள்ளிட்டோர் மீது தேர்வுக்குழுவின் கவனம் குவியக்கூடும்.
மேலும் பஞ்சாப்பை சேர்ந்த இளம் பேட்ஸ்மேனான சுப்மான் கில் பெயரும் தேர்வின் போது கருத்தில் கொள்ளப்படக்கூடும். அதேவேளையில் உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படத் தவறிய தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், மகாராஷ் டிராவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான கேதார் ஜாதவ் ஆகியோர் அணி யில் தங்களது இடத்தை இழக்கவும் வாய்ப்பு உள்ளது.
உலகக் கோப்பை தொடரின் போது கை விரலில் காயம் அடைந்த ஷிகர் தவண் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தில் அவர், இடம் பெறுவது சந்தேகமே. கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் சிரமம் இருக்க வாய்ப்பில்லை.
இளம் லெக் ஸ்பின்னரான ராகுல் ஷகாரையும் தேர்வுக்குழுவினர் பரிசீலனை செய்யக்கூடும். வேகப் பந்து வீச்சில் மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோரது இடங்கள் உறுதிதான். இவர் களுடன் டெல்லியைச் சேர்ந்த நவ்தீப் சைனி இடம் பெற அதிக வாய்ப்புள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிராக தற் போது நடைபெற்று வரும் தொடரின் ஒரு ஆட்டத்தில் நவ்தீவ் சைனி 5 விக்கெட்கள் வீழ்த்தி கவனத்தை ஈர்த்திருந்தார்.
கலீல் அகமது, தீபக் ஷகார், அவேஷ் கான் ஆகியோரது பெயர் களை தேர்வுக்குழுவினர் விவாதிக் கக்கூடும். டெஸ்ட் போட்டிக்கான அணியில் விக்கெட் கீப்பராக யார்? தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர் பார்ப்பும் நிலவுகிறது. ஏனெனில் நாட்டின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக கருதப்படும் விருத்திமான் சாஹா காயத்தில் இருந்து மீண்டு முழு உடல் தகுதியை பெற்றுள்ளார்.
அவருக்கு மாற்று வீரராக டெஸ்ட் போட்டிகளில் களமிறக்கப்பட்ட ரிஷப் பந்த் ஆஸ்திரேலியா, இங் கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த் திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. - பிடிஐ