

எனது ஒட்டுமொத்த உடற்தகுதி யைப் பொறுத்தே உலக சாம்பியன் ஷிப் உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி வாய்ப்பு அமையும் என இந்திய பாட்மிண்டன் வீராங் கனை சாய்னா நெவால் தெரிவித் தார்.
சர்வதேச தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள சாய்னா நெவால், அடுத்து நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்காக பெங்களூரில் உள்ள பிரகாஷ் படுகோன் பாட் மிண்டன் அகாடமியில் பயிற்சியா ளர் விமல் குமாரிடம் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
நான் ஆராய்ந்த வரையில் அடுத்து நடைபெறவுள்ள போட்டி களில் எனது செயல்பாடு நிச்சயம் மிகச்சிறப்பாக இருக்கும். எனினும் வெற்றி வாய்ப்பு என்பது எனது ஒட்டுமொத்த உடற்தகுதியை சார்ந்தே அமையும். 2015-16 சீசனில் நடைபெறவுள்ள பெரும்பாலான போட்டிகளில் விளையாட முடிவு செய்திருக்கிறேன். உதாரணமாக இந்த ஆண்டில் உலகக் கோப்பை, ஜப்பான் ஓபன், சீன ஓபன், டென் மார்க் ஓபன், ஹாங்காங் ஓபன் ஆகிய போட்டிகளில் விளையாடவிருக்கிறேன் என்றார்.
கடந்த 3 வாரங்களாக பெங்களூரில் இருக்கும் சாய்னா, தினமும் 8 மணி நேர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பாட்மிண்டன் பயிற்சிக்கு 4 மணி நேரமும், உடற்பயிற்சிக்கு 4 மணி நேரமும் செலவிடுகிறார்.
அது தொடர்பாக பேசிய அவர், “எனது ஆட்டத்தில் முழு கவனம் செலுத்துவதற்காகவே பெங்க ளூரில் இருக்கிறேன். பாட்மிண்டன் வீரர்களின் முன்னேற்றத்துக்கு தேவையான அனைத்துவிதமான உதவிகளும், வசதிகளும் எனக்கு கிடைக்கின்றன” என்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தபோது அந்த இடத்தைப் பிடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தார் சாய்னா. அதன்பிறகு ஏற்ற, இறக்கங்களை சந்தித்தபோதும் கடந்த ஒன்றரை மாதமாக தரவரிசையில் தொடர்ச்சியாக 2-வது இடத்தில் இருக்கிறார்.
அது குறித்துப் பேசிய சாய்னா, “முதலிடம் என்பது நிலையானது அல்ல. அது காலம் மற்றும் செயல்பாட்டை பொறுத்து மாறிக்கொண்டேயிருக்கும். சீனாவின் லீ ஸியூரூய் ஏறக்குறைய ஓர் ஆண்டு காலம் முதலிடத்தில் இருந்தார். ஆனால் இப்போது அவர் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.
இப்போது என்னுடைய ஆட்டத் தில் முன்னேற்றம் தெரிகிறது. சிறப் பான பயிற்சியை பெற்று வரு கிறேன். இதேபோன்று 100 சத வீத ஆட்டத்தை தொடர்ந்து வெளிப் படுத்தும்போது நான் மீண்டும் முதலிடத்தைப் பிடிக்க வாய்ப் பிருக்கிறது” என்றார்.