உலகக்கோப்பை பைனல் சூப்பர் ஓவரின் போது உயிரிழந்த ஜிம்மி நீஷமின் சிறுபிராய பயிற்சியாளர்

ஜிம்மி நீஷம். | கெட்டி இமேஜஸ்
ஜிம்மி நீஷம். | கெட்டி இமேஜஸ்
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை பைனல் பரபரப்பான முறையில் சூப்பர் ஓவருக்குச் சென்ற போது நியூஸிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் சிக்சர் அடித்த உடன் அவரது சிறுபிராய பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டனின் உயிர் பிரிந்த செய்தி கேட்டு நீஷம் பெரும் மன வேதனையடைந்தார். 

பல சர்ச்சைக்குரிய (விதி) முறைகளில் இங்கிலாந்து அணி உலகசாம்பியன்களானது, நியூசிலாந்து அணி தார்மிக வெற்றி பெற்றதாகவே ரசிகர்கள் கருதினர். 

இந்நிலையில் சூப்பர் ஓவரில் ஜேம்ஸ் நீஷம் 2வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். ஜிம்மி நீஷமின் சிறுபிராய பயிற்சியாளர் டேவிட் ஜேம்ஸ் கார்டன் உயிர் பிரிந்ததாக அவரது மகள் லியோனி தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஜிம்மி நீஷம் தன் ட்விட்டரில், “டேவ் கார்டன், என் பள்ளி ஆசிரியர், பயிற்சியாளர், நண்பர், இந்த கிரிக்கெட் மீதான அவரது பற்று  ஒரு தொற்று. குறிப்பாக உங்களின் கீழ் ஆடிய எங்களில் ஒருசிலருக்கு இது அதிர்ஷ்டமான தொற்று.  நீங்கள் பெருமையடைந்திருப்பீர்கள். அனைத்துக்கும் நன்றி, உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று ட்வீட் செய்திருந்தார். 

இவர் மட்டுமல்ல லாக்கி பெர்கூசன் மற்றும் சில நியூஸிலாந்து வீரர்களையும் உருவாக்கியதில் பயிற்சியாளர் டேவ் கார்டனுக்குப் பங்கு உண்டு என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

-ஐ.ஏ.என்.எஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in