Published : 18 Jul 2019 07:22 PM
Last Updated : 18 Jul 2019 07:22 PM

சேவாக், மெக்கல்லம் கலவை பேட்டிங் கொண்ட ஜேசன் ராய் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தேர்வு

பேட்டிங் ஸ்டைலில் நம் விரேந்த்ர சேவாக், நியூஸிலாந்தின் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் ஆகியோரது கலவையான ஒரு பன்முக ஸ்டைலில் ஆடும் இங்கிலாந்தின் ஜேசன் ராய் டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த வாரம் புதன் கிழமை லார்ட்ஸில் அயர்லாந்துக்கு எதிராக ஜேசன் ராய் தன் டெஸ்ட் வாழ்க்கையை துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர் ரோரி பர்ன்ஸுடன் இங்கிலாந்துக்காக தொடங்குவார் என்று கூறப்படுகிறது. 

ஜேசன் ராயின் ஹை பிளிக், பிளிக், ஸ்லாக் ஸ்வீப், மேலேறி வந்து வெளுப்பது, ஆஃப் திசையில் கவர் ட்ரைவ் போன்றவை சேவாகை நினைவு படுத்தினால் இவரது புல் ஷாட், ஹூக் ஷாட் பிரெண்டன் மெக்கல்லமை நினைவூட்டுகிறது. இப்போதைக்கு உலகின் அபாயகரமான தொடக்க வீரர் என்றால் அது ஜேசன் ராய் என்றால் மிகையாகாது. 

தென் ஆப்பிரிக்காவில் பிறந்த ஜேசன் ராய் உலகக்கோப்பையில் 443 ரன்களைக் குவித்தார். அயர்லாந்துக்கு எதிராக வெள்ளோட்டம் பார்த்த பிறகு ஆஸ்திரேலியாவை அச்சுறுத்த டெஸ்ட் போட்டியில் ஆஷஸ் தொடரில் ஜேசன் ராய் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு 2 அச்சுறுத்தல், ஒன்று ஜேசன் ராய், இன்னொன்று பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர். 

அயர்லாந்துக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணி:

ஜோ ரூட், மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், சாம் கரண், ஜோ டென்லி, லூயிச் கிரிகரி, ஜாக் லீச், ஜேசன் ராய், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ். 

ஆஷஸுக்கு முந்தைய இங்கிலாந்து பயிற்சி முகாமுக்கான வீரர்கள்:

மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், பேர்ஸ்டோ, பிராட், பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரண், ஜோ டென்லி, லூயிஸ் கிரிகரி, ஜாக் லீச், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் உட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x