12 விக்கெட்டுகள், பேட்டிங்கில் அதிரடி 66 ரன்கள்: நாட்டிங்கம் தோல்வியிலும் அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்

12 விக்கெட்டுகள், பேட்டிங்கில் அதிரடி 66 ரன்கள்: நாட்டிங்கம் தோல்வியிலும் அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின்
Updated on
1 min read

இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட் அணி நாட்டிங்கம்ஷயருக்காக ஆடும் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்ரே அணிக்கு எதிரான கவுண்டி கிரிக்கெட்டில் ஆல்ரவுண்ட் திறமையைக் காட்டி அசத்தினார்.

ஆனாலும் சர்ரே அணியில் இந்திய வம்சாவளி ஆஃப் ஸ்பின் பவுலர் குர்மார்சிங் வர்டி என்பவர் முதல் 8 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியதால் அஸ்வின் ஆடிய நாட்டிங்கம்ஷயர் அணி தோல்வி தழுவியது.

சர்ரே அணி 240 மற்றும் 224/9 டிக்ளேர் என்ற ஸ்கோரை அடிக்க நாட்டிங்கம் அணி 116 மற்றும் 181 ரன்களுக்குச் சுருண்டு சர்ரேயிடம் 167 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. 

ஆனால் நாட்டிங்கம் அணிக்காக இந்திய ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 இன்னிங்ஸ்களிலும் தலா 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி மொத்தமாக 12 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் 27 ரன்களை எடுத்து அதிகரன் எடுத்த நாட்டிங்கம் வீரராகத் திகழ்ந்ததோடு இரண்டாவது இன்னிங்சில் 349 ரன்கள் இலக்கை எதிர்த்து ஆடிய போது 71/5 என்று திணறியது 7ம் நிலையில் இறங்கிய அஸ்வின் 79 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்து அதிகபட்ச ரன்னை எடுத்த நாட்டிங்கம் வீரராக திகழ்ந்தார்.

இவரும் ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து 56 ரன்களை 9வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர், பிராட் 30 ரன்களை சேர்த்தார். 

இந்த சீசனில் அஸ்வின் மொத்தம் 23 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். சோமர்செட் அணிக்கு எதிராக முந்தைய போட்டியில் 8 விக்கெட்டுகளையும், இதற்கு முன்னதாக எசெக்ஸ் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தி வருகிறார் அஸ்வின். 

நாளை மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடரில் அஸ்வின் டெஸ்ட், மற்றும் குறைந்த ஓவர் போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in