

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) அணியான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பயிற்சியாளர் டாம் மூடியை அனுப்பி விட்டு அவருக்குப் பதிலாக பயிற்சியாளராக உலக சாம்பியன் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான ட்ரவர் பெய்லிஸை நியமித்துள்ளது.
இதனை அறிவிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெளியிட்டுள்ளது.
ஏற்கெனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக ட்ரவர் பெய்லிஸ் இருந்த போது இருமுறை கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது.
சன் ரைசர்ஸ் அணி தன் அறிவிப்பில் “டாம் மூடி கடந்த 7 ஆண்டுகளில் அணியை 5 பிளே ஆப் சுற்றுகளுக்கு இட்டுச் சென்றுள்ளார், அவரது பங்களிப்புக்காக அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். 2016-ல் கோப்பையை வென்றதும் டாம் மூடியின் வழிநடத்தலில்தான். அவரது பணி நெறி, மற்றும் தலைமைத்துவம் அபரிமிதமானது. அவரது எதிர்கால வாழ்வுக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வாழ்த்து தெரிவிக்கிறது. பெய்லிஸ் ஒரு நிரூபிக்கப்பட்ட வின்னர் ஆவார். சன் ரைசர்ஸ் அணியை மேலும் முன்னேற்றத்தில் இட்டுச் செல்ல பெய்லிஸ் பங்களிப்பார்” என்று கூறியுள்ளது.
நன்றி: ஸ்போர்ட்ஸ்டார்