Published : 16 Jul 2019 03:31 PM
Last Updated : 16 Jul 2019 03:31 PM

கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்து கோப்பை வெல்லவில்லையே? -  ஷேவாக்கின் பழைய ட்வீட்டுக்கு தற்போது பதிலடி அளித்த பிரபலம்

பியர்ஸ் மோர்கன் (இடது)

கிரிக்கெட்டைக் கண்டுபிடித்த இங்கிலாந்து இன்னும் உலகக் கோப்பையை வெல்லவில்லையே என்ற ஷேவாக்கின் பழைய ட்வீட்டுக்கு இங்கிலாந்து டிவி பிரபலம் பியர்ஸ் மோர்கன் தற்போது பதிலளித்துள்ளார்.

இந்தியாவில் பல கோடிக்கணக்கான மக்கள்  இரு பதக்கங்களைக் கொண்டாடுகிறார்கள் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் இங்கிலாந்து டிவி பிரபலமான பியர்ஸ் மோர்கன் கடந்த 2016 ஆம் ஆண்டு செய்தி ஒன்றைக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இதற்கு, ஷேவாக் நாங்கள் சின்னச் சின்ன விஷயங்களைக் கூடக் கொண்டாடுவோம். ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட்டைக் கண்டுபிடித்தும் அவர்கள் உலகக்கோப்பையை வெல்லவில்லை என்று பதிவிட்டிருந்தார். 

அதற்கு தற்போது உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்று விட்டதால் அந்த இரண்டு வருட பழைய ட்வீட்டைக் குறிப்பிட்டு, 'ஹாய்  நண்பா'  என்று மோர்கன் ஷேவாக்கு பதிலளித்துள்ளார்.

முன்னதாக, நியூஸிலாந்து - இங்கிலாந்து இடையே ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக்கோப்பை  இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் முறையாக வென்று வரலாற்று சாதனை படைத்தது.

முதலில் நடைபெற்ற பிரதான போட்டியில்  நியூஸிலாந்து அடித்த 241 ரன்னை இங்கிலாந்து எடுத்ததால் ஆட்டம் டிராவில் முடிந்தது . இதனைத் தொடர்ந்து  நடத்தப்பட்ட சூப்பர் ஓவரும் டையில் முடிந்தது. இதனால், ஒரு இன்னிங்ஸில் அதிகமான பவுண்டரியை எந்த அணி அடித்தது என்ற அடிப்படையில் கணக்கிடும்போது இங்கிலாந்து அணி அதிகமாக எடுத்திருந்ததால், அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.  இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூஸிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்திருந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x