Published : 16 Jul 2019 09:36 AM
Last Updated : 16 Jul 2019 09:36 AM

இறுதிப் போட்டியை பார்த்த அனைவரும் பென் ஸ்டோக்ஸ் ஆக முயற்சிக்க வேண்டும்: இயன் மோர்கன் உற்சாகம்

லண்டன்

உலகக் கோப்பை கிரிக்கெட் தொட ரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று 44 வருட கனவு களை நினைவாகிக் கொண்டது இங்கிலாந்து அணி. நேற்று முன்தினம் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியில் சூப்பர் ஓவரின் போதும் ஆட்டம் டையில் முடிவடைந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

முதன் முறையாக கோப்பையை வென்றது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் கூறியதாவது:

நியூஸிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கும், அந்த அணியினருக்கும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். வில்லி யம்சன் தனது அணியை அபார மாக வழிநடத்துகிறார். லீக் சுற்றில் நியூஸிலாந்து அணி அற்புத மாக செயல்பட்டது. சீரான திறனை தொடர்ச்சியாக வெளிப்படுத்தினார் கள். அரை இறுதியில் மிகவும் வலுவான இந்திய அணிக்கு எதிராக இரக்கமற்ற வகையில் விளையாடியது.

இறுதிப் போட்டியில் ஆடுகளம் கடினமாக இருந்ததால் எல் லோருமே ரன்கள் சேர்க்க சிரமப் பட்டோம். ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் சிறப்பாக பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். அது எங்களை ஆழமாக அழைத்துச் செல்லும் என்று நினைத்தேன், அப்படியே நடந்தது.

எங்களது 4 வருட பயணத்தில் இதுபோன்ற ஆடுகளத்தில் விளை யாடுவது கடினம். தற்போது கோப்பையை வென்றுள்ளதன் மூலம் உலகம் எங்கள் வசமாகி யுள்ளது. சூப்பர் ஓவரில் சிறப்பாக செயல்பட்ட பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சரை பாராட்டியே ஆக வேண்டும். இவர்கள் இருவரும் சமீபகாலமாகவே அசத்தி வருகின்றனர்.

ஜோப்ரா ஆர்ச்சர் வாய்ப்பு கிடைக்கும் சமயங்களில் எல்லாம் அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். பென் ஸ்டோக்ஸ் ஒட்டுமொத்த ஆட்டத்தின் சூழ் நிலை, உணர்வுகளை தனது அனுப வத்தால் அற்புதமாக கையாண் டார். அவரது ஆட்டத்தை வீட்டில் இருந்து டி.வி.யில் பார்த்த அடுத்த தலை முறையினர் நிச்சயம் பென் ஸ்டோக்ஸ் போன்று வரவேண்டும் என முயற்சிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு இயன் மோர்கன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x