செய்திப்பிரிவு

Published : 15 Jul 2019 20:50 pm

Updated : : 15 Jul 2019 20:50 pm

 

ஐசிசி உலகக்கோப்பை அணியில் விராட் கோலி இல்லை; ரோஹித் பும்ராவுக்கு மட்டும் இடம்

rohit-bumrah-only-indians-in-icc-world-cup-xi-winners-england-dominate

ஐசிசி உலகக்கோப்பை லெவனில் இந்திய அணியிலிருந்து 5 சதங்கள் அடித்து உலக சாதனை புரிந்த ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

உலகக்கோப்பை தொடர் நாயகனான ரன்னர் அணி நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த உலகக்கோப்பை அணிக்கு கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பரபர இறுதிப் போட்டியிலிருந்து 6 வீரர்கள் இந்த ஐசிசி உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். உலக சாம்பியன் இங்கிலாந்து அணியிலிருந்து அதிகபட்சமாக 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  ரன்னர் அணியான நியூஸியிலிருந்து 2 வீரர்கள்.  

அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியா, ஆஸ்திரேலியாவிலிருந்து 2 வீரர்கள், வங்கதேச நம்பர் 1 ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் இடம்பெற்றுள்ளார்.

ரோஹித் சர்மா 648 ரன்கள் எடுத்து டாப் ஸ்கோரராக திகழ, பும்ரா 18 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 

ஜேசன் ராய், ரோஹித் சர்மா தொடக்க வீரர்கள்.  3ம் நிலையில் கேன் வில்லியம்சன்,  இங்கிலாந்தின் டாப் ரன் ஸ்கோரர் ஜோ ரூட் 4ம் நிலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  வங்கதேச அணி ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் 5ம் நிலைக்குத் தேர்வாகியுள்ளார்.  6ம் நிலைக்கு ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

7-ம் நிலைக்கு ஆஸி. விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் 8ம் நிலைக்கு வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும் 8ம் நிலைக்கு ஜோப்ரா ஆர்ச்சரும், நியூஸிலாந்தின் அதிவேக பவுலர் லாக்கி பெர்கூசன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். 

இந்திய அணியின் உலகின் சிறந்த பேட்ஸ்மென் விராட் கோலிக்கு இதில் இடமில்லை, மோர்கனுக்கும் இடமில்லை. மே.இ.தீவுகளிலிருந்து ஒருவர் கூட இடம்பெறவில்லை, ஜேசன் ஹோல்டருக்காவது இடம் கொடுத்திருக்கலாம். பெர்கூசனுக்குப் பதிலாக ஹோல்டர்தான் சிறந்த தேர்வாக இருக்க முடியும். ஆனால் இல்லை. 

ஐசிசி உலகக்கோப்பை அணி வருமாறு: ஜேசன் ராய், ரோஹித் சர்மா, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஷாகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஜோப்ரா ஆர்ச்சர், லாக்கி பெர்கூசன், ஜஸ்பிரித் பும்ரா.

ஐசிசி உலகக்கோப்பை லெவன்உலகக்கோப்பை 2019ரோஹித் சர்மாபும்ராகேன்வில்லியம்சன் கேப்டன்பென் ஸ்டோக்ஸ்ஷாகிப் அல் ஹசன்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author