செய்திப்பிரிவு

Published : 15 Jul 2019 17:51 pm

Updated : : 15 Jul 2019 17:52 pm

 

என் வாழ்நாள் முழுதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன்: பென் ஸ்டோக்ஸ் வேதனை

i-apologise-with-kane-williams-for-rest-of-my-life-ben-stokes
பென் ஸ்டோக்ஸ். | ஏ.எஃப்.பி.

2019 உலகக்கோப்பை இறுதிப் போட்டி கடைசி கட்டத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகளுடன் நிறைவுற்றது, இதில் பிரதானமானது கடைசி ஒவரில் பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பவுண்டரி செல்ல அதற்கு ஓவர் த்ரோ 6 ரன்கள் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

கேன் வில்லியம்சன் தனது அபாரமான ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டினால் அப்பீல் செய்யவில்லை, அவுட்டும் கேட்கவில்லை, 6 ரன்கள் கிடையாது  5 ரன்கள்தான் என்று வாதிடவும் இல்லை, ஜென் மனோ நிலையில் அவர் ஒரு சிறு புன்னகையுடன் விட்டு விட்டார்.

டீப் மிட்விக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் பந்தை அடிக்க அது மார்டின் கப்திலிடம் செல்ல அவர் த்ரோ நேராக ஸ்டம்பை நோக்கி வந்தது அப்போது குறுக்காக ஓடி வந்த பென் ஸ்டோக்ஸ் மட்டையில் பட்டு பந்து 4 ஓவர் த்ரோவாக பவுண்டரிக்குப் பறந்தது, இதனால் இங்கிலாந்து ‘டை’ செய்ய முடிந்தது. 

இதைப் பற்றி கேன் வில்லியம்சன் கடைசியில் ‘பிட் ஆஃப் அ ஷேம்’ என்று முடித்துக் கொண்டார். ஆனால் நெட்டிசன்கள், முன்னாள் வீரர்கள், நடுவர்கள் இந்த ஓவர் த்ரோ முடிவை கடுமையாக கண்டித்துள்ளனர். 

இந்நிலையில் நேற்றைய ஹீரோ பென் ஸ்டோக்ஸ் கூறியிருப்பதாவது:

“எனக்கு வார்த்தைகளே இல்லை. கடினமான உழைப்புக்குப் பிறகு உலக சாம்பியன்கள். இது அபாரமான உணர்வு. நியூஸிலாந்து வீரர்கள் நல்லவர்கள். அந்த ஓவர் த்ரோ சம்பவத்துக்காக்  என் வாழ்நாள் முழுதும் கேன் வில்லியம்சனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டிருப்பேன். எங்கள் ஜாதகத்தில் இப்படி நடக்க வேண்டும் என்று எழுதியிருந்தது, என்ன செய்வது?” என்று கூறியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்ஓவர்த்ரோஇங்கிலாந்து-நியூஸிலாந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிஇங்கிலாந்து உலக சாம்பியன்கள்கேன் வில்லியம்சன்Ben StokesOverthrow incidentKane WilliamsonApology

Popular Articles

You May Like

More From This Category

More From this Author