

தாய்லாந்து தலைநகர் பாங்காக் கில் வரும் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 6 வரை நடைபெற வுள்ள ஆசிய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்கும் 10 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் நடப்பு சாம்பியனான சிவ தாபா (56 கிலோ எடைப் பிரிவு), காமன்வெல்த் போட்டி யில் வெள்ளிப் பதக்கம் வென்ற மன்தீப் ஜங்ரா (69 கிலோ) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சிவ தாபா, மன்தீப் ஜங்ரா தவிர, தேவேந்திரோ சிங்கும் (49 கிலோ) இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த ஆசிய சாம்பியன் ஷிப் போட்டி மற்றும் காமன் வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 75 கிலோ எடைப் பிரிவில் விகாஸ் கிரிஷன் இடம்பெற்றுள்ளார்.
அணி விவரம்:
தேவேந்திரோ சிங் (49 கிலோ), மதன் லால் (42 கிலோ), மணீஷ் கவுசிக் (60 கிலோ), மனோஜ் குமார் (64 கிலோ), மன்தீப் ஜங்ரா (69 கிலோ), விகாஸ் கிரிஷன் (75 கிலோ), குல்தீப் சிங் (81 கிலோ), மன்ப்ரீத் சிங் (91 கிலோ), சதீஷ் குமார் (+91 கிலோ), சிவ தாபா (56 கிலோ).