முரளிதரன், ரிச்சர்ட் ஹேட்லிக்குப் பிறகு விரைவு 400 விக்கெட்டுகள்: டேல் ஸ்டெய்ன் சாதனை

முரளிதரன், ரிச்சர்ட் ஹேட்லிக்குப் பிறகு விரைவு 400 விக்கெட்டுகள்: டேல் ஸ்டெய்ன் சாதனை
Updated on
1 min read

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் 400-வது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்தார்.

முத்தையா முரளிதரன் 72 டெஸ்ட்களில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் வகிக்க, நியூஸிலாந்தின் வேகப்பந்து முன்னாள் மேதை ரிச்சர்ட் ஹேட்லி 80 போட்டிகளில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்ற தற்போது டேல் ஸ்டெய்ன் 80-வது டெஸ்ட் போட்டியில் 400-வது விக்கெட்டை வீழ்த்தி ஹேட்லியுடன் 2-வது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் 13-வது பவுலர் ஆகிறார் ஸ்டெய்ன். ஷான் போலாக்கிற்குப் பிறகு 400 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டிய மற்றொரு தென்னாப்பிரிக்க வீச்சாளர் ஆனார் ஸ்டெய்ன். ஸ்டெய்ன் விளையாடிய 79 டெஸ்ட் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 61 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்ப்ரிக்க டெஸ்ட் வெற்றியில் ஸ்டெய்னின் அபரிதமான பங்களிப்பை பறைசாற்றுகிறது.

மற்ற வீச்சாளர்களிடமிருந்து டேல் ஸ்டெய்னை பிரித்து வைப்பது எது என்பது பற்றி ஆலன் டோனல்ட் கூறிய போது, “அவரது திறமை, வேகம் மற்றும் உறுதி ஆகியவை அவரை அனைத்து கால சிறந்த வேகப்பந்து வீச்சாளராக மாற்றியுள்ளது. அவர் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றுவார் என்று நம்புகிறேன். அதுதான் அவர் விரும்புவதும். இதைத்தான் ஸ்டெய்ன் என்னிடமும் கூறினார்” என்றார்.

வங்கதேச அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in