3-வது டெஸ்ட்: பாகிஸ்தான் தடுமாற்றம்

3-வது டெஸ்ட்: பாகிஸ்தான் தடுமாற்றம்
Updated on
1 min read

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 64 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது.

பல்லகெலேவில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 86 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி, 2-வது நாளான நேற்று மேலும் 6 ரன்கள் சேர்த்த நிலையில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து பேட் செய்த பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் ஷான் மன்சூத் 13, அஹமது ஷெஸாத் 21, யூனிஸ்கான் 3 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, 45 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். ஆசாத் ஷபிக் 15 ரன்களில் வெளியேற, சர்ஃப்ராஸ் அஹமது களமிறங்கினார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய அசார் அலி 87 பந்துகளில் அரைசதம் கண்டார். அவர் 52 ரன்கள் எடுத்து வெளியேற, பின்னர் வந்த கேப்டன் மிஸ்பா 6 ரன்களிலும், ஈஷான் அடில் ரன் ஏதுமின்றியும் வெளியேற, மீண்டும் தடுமாற்றம் கண்டது பாகிஸ்தான். ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 64 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. சர்ஃப்ராஸ் 72 ரன்களுடனும், இம்ரான் கான் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in